9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , வாழ்வியல் - திருக்குறள் - குறுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 - THIRUKKURAL - KURUVINA

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல்  - 3 , வாழ்வியல் 

திருக்குறள் 

குறுவினா - வினாக்களும் விடைகளும்


1. நிலம்போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

       நம்மை இகழ்பவரிடம் நாம், நிலம்போலப் பொறுமை காக்கவேண்டும்.

2 . தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

      தீயசெயல், தீய பயனையே தருதலால், தீயசெயலைத் தீயைவிடவும் கொடியதாகக் கருதிச் செய்வதற்கு அஞ்ச வேண்டும்.

3 . ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல். -

 இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

* ஓர் ஒற்றனால் அறிந்தவற்றை மற்றொரு ஒற்றனால் அறிந்துவரச் செய்து, உறுதி செய்தல் நல்லது. இக்குறளில் - ‘ஒற்று' என்னும் சொல் - ஒற்றொற்றி - ‘ஒற்றினால் ஒற்றி' என இணைந்து இனிய ஓசையுடன் அரிய பொருளையும் தருவது நயமாகும்.

* ' ஒற்று' என்பது ஒற்றனையும் அவர் ஒற்றிக் கொணர்ந்த செய்தியையும் உணர்த்துவது நயமானதாகும்.

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

கனவிலும் இனிக்காதது, சொல் 'வேறாகவும் செயல் வேறாகவும் இருப்பவர் நட்பாகும்.

Post a Comment

0 Comments