9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - மொழியோடு விளையாடு - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 , MOZHIYODU VILAIYAADU - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 3 , உள்ளத்தின் சீர்

மொழியோடு விளையாடு

பொருள் எழுதித் தொடரமைக்க.

எ.டு : அலை - கடலலை -  இன்று கடலில் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.

அழை -  வரவழைத்தல் -  என் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளேன்.

கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை.

கரை - காகம் கா கா எனக் கரைந்தது.

கறை மாசு, அழுக்கு அண்ணல் காந்தியின் கரம், கறைபடியாக் கரம்.

குளவி - குளவி என்பது, ஒருவகைப் பூச்சி இனமாகும்.

குழவி - குழந்தை மக்கள் வாழ்வில் குழந்தைப் பருவம் மிகவும் இனிமையானது.

வாளை - மீன்வகை  - வாளை என்பது ஒருவகை மீனாகும்.

வாழை -  மரவகை - வாழைமரத்தின் அனைத்துப் பொருட்களும் மருந்தாகும்.

பரவை - கடல் - கடலுக்குப் பரவை என்ற பெயரும் உண்டு.

பறவை - புள் - பறவை இசைக்கு மயங்கும்.

மரை -  திருகு - மரை கழன்று தளர்ந்ததால், இயந்திரம் நின்றது.

மறை - வேதம் - திருக்குறள், தமிழரின் மறைநூலாகும்.

அகராதியில் காண்க

இயவை - வழி, மூங்கிலரிசி, துவரை.

சந்தனப்பேழை - சந்தனப் பெட்டி

சிட்டம் - நூல் சிட்டம்

தகழ்வு - வீண் ஆடம்பரம் 

பௌரி - பெரும் பண்வகை

பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு, பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்துப் புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக.

இறுதித்தொடர், அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.

1. வைக்காதீர்கள் 2. வைக்காதீர்கள் 3. வைக்காதீர்கள் 4. வைக்காதீர்கள்

விடை : காலை வைக்காதீர்கள்.

கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்.

காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்.

அறுந்த மின்கம்பிகள், காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்.

கவனக்குறைவுடன் அறுந்த மின்கம்பிகள், காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்.

மழைக்காலங்களில் தெருவில் கவனக்குறைவுடன் அறுந்த மின்கம்பிகள், காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்.


Post a Comment

0 Comments