9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , கற்பவை கற்றபின் - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 - KARPAVAI KATRAPIN - QUESTION & ANSWER

 



ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 3 

கற்பவை கற்றபின் - பாடப்பகுதி வினா & விடை

1 ) வல்லினம் மிகலாமா?

வல்லினம் மிகும்.

அ) பெட்டி செய்தி - பெட்டிச்செய்தி

ஆ) விழா -  குழு  - விழாக்குழு

இ) கிளி - பேச்சு - கிளிப்பேச்சு

ஈ) தமிழ் - தேன் - தமிழ்த்தேன்

உ) தை - பூசம் - தைப்பூசம்

ஊ) கூட - கொடு கூடக்கொடு

எ) கத்தியைவிட  - கூர்மை - 

கத்தியைவிடக்கூர்மை

ஏ) கார் - பருவம் - கார்ப்பருவம்

2 ) தொடர் தரும் பொருளைக் கூறுக.

அ) சின்னக்கொடி -  சின்னத்தை உடைய கொடி

சின்னகொடி - சிறிய கொடி

ஆ) தோப்புக்கள் - தோப்பில் இறக்கப்பட்ட கள்

தோப்புகள் -  மா, பலா, வாழைத் தோப்புகள்.

இ) கடைப்பிடி - பின்பற்று

கடைபிடி - ஒரு கடையைப் பிடி

ஈ) நடுக்கல் - நடுவில் உள்ள கல்

நடுகல் - நடப்பட்ட கல்

உ) கைம்மாறு - அன்பளிப்பு , பிரதிபலன்

கைமாறு - கையிலிருந்து மற்றொருவர்க்கு மாற்று 

ஊ) பொய்ச்சொல் - பொய்யாகிய சொல்

பொய்சொல்  - பொய்யினைச்சொல்

கையிலிருந்து மற்றொருவர்க்கு மாற்று.

பொய்யாகிய சொல்

பொய்யினைச் சொல்

3 ) சிந்தனை வினா

நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல் எழுதிவருவதை நீங்கள்   பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிகவேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.

அதற்க்கு - தவறு

அதற்கு = அது + அன் + கு

அது (சுட்டுப்பெயர்) + அன் (சாரியை) + கு (வேற்றுமை உருபு).

அதற்கு - அதன் + கு = என்பதே சரி

எ-கா: அந்தப் பொருள் வேண்டாம்; அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள்.

2 . கடைபிடித்தல், கடைப்பிடித்தல்.

கடைபிடித்தல் - கடையைப் பிடித்தல், கடைப்பிடித்தல் பின்பற்றுதல்.

எ-கா: சேகர், புதிதாக வணிகம் தொடங்கக் கடைபிடித்தார்.

நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்.

மொழியின் ஆக்கத்திற்குப் புணர்ச்சி இன்றியமையாதது. புணர்ச்சிவிதியில் வல்லெழுத்து மிகவேண்டிய இடத்தில் மிகாமல் இருந்தால், பொருள் உணர்வதில் இடர்ப்பாடு ஏற்படும். 

தந்த பலகை - ஒருவரால் தரப்பட்ட பலகை.

தந்தப்பலகை - தந்தத்தால் ஆகிய பலகை.

4,உரிய இடங்களில் வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடுத் தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்கள் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று. கீழடியில் வாழ்ந்த மக்களில் பலர்ச் செல்வர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்கு குறைவான எண்ணிக்கையில்தான் தங்கத்தினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.

    மேலும் இரும்பை பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்தச் சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடி பொருள்களில் உருவாக்கிய.மணிகள், வளையல், தோடுப் போன்றவையும் கிடைத்துள்ளன.

விடை : பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்ற பொருள்கள் உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.

கீழடியில் வாழ்ந்த மக்களில் பலர், செல்வர்களாக இருந்துள்ளனர் என்பதை, அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில்தான் தங்கத்தினாலான பொருள்கள் கிடைக்கின்றன.

மேலும், இரும்பைப் பயன்படுத்திச் செய்த கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும், யானைத் தந்தத்தினால் செய்த சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.






Post a Comment

0 Comments