கொடி நாள் - கவிதை - டிசம்பர் 7 , 2021 / KODINAAL KAVITHAI - DECEMBER - 7 - 2021

 


                     கொடி நாள்

                      7 • 12 •2021


முதுமை காப்போம்!                           முடிந்தவரை செய்வோம் !

நாட்டின்  நலன் காக்க 

நான்கு திசையும் கரம் விரித்து

படர்பனியின்  முகடு நின்று

அலைகடல் நடுவே சென்று

வான்வெளியில் வேலி அமைத்து

தேசம் காக்கும் வீரர்கள்.....

கடுங்குளிரும்  கார்கால மழையும் -- இவை

கலந்த  நடுங்கவைக்கும்  புயலிலும் 

வெயிலிலும்  இடியிலும் வேர்பறிக்கும் காற்றிலும்

விழுந்து..எழுந்து... நடந்து.....கடந்து...

உறைபனியிலும் உள்ளம் உறையா

தேசம் காக்கும் கடவுள்கள்...

எமது வீரவணக்க விழுப்புண்கள்...!

இளமை தொலைத்து  குடும்பம் விடுத்து 

மொழி அறியா சூழலும் வென்று

அணி அணியாக  அரணமைத்து 

துப்பாக்கி ஏந்திய வீர மறவர்கள்

குழிக்குள் பதுங்கி  குன்றேறி உயர நின்று

கட்ட பொம்மனாக !  மதுரை வீரனாக !

ரவுத்திரம் பழகிய இராஜநடை வீரர்கள்...!

பயமதைப் பறக்க விட்டு

பாய்ந்து  வரும் குண்டுகளைக் கண்டு

தோய்ந்து போகாமல் எதிர்கொண்டு

அச்சமில்லை  அச்சமில்லையென 

பாரதி தந்த துணிவின் வடிவாகி 

ஆயுதம் ஏந்திய வீரர்கள் தான்... -- தன்

காயங்கள் கண்டு ஓயவில்லை

மாயங்கள்  ஏதும்  செய்யவில்லை

தன் தேசமதை மதிப்பதனால்  -- என்றும்

ஓய்வுபெற்ற  வீரர் வாழ்வு 

தேய்வு ஒன்றும் கண்டிடாமல் 

சாய்ந்து கொள்ள  நாமிருப்போம் ....! --இனி

வீரத்துக்கு  வாழ்த்துரைப்போம்..!

வீரர்  நல வாழ்வுக்கு  நிதியளிப்போம்..!!


                 🙏  வெல்க பாரதம்🙏

Post a Comment

1 Comments