ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - மொழியை ஆள்வோம் - பாடப்பகுதி வினா & விடை / 9th TAMIL - EYAL 3 - MOZHIYAI AALVOM - QUESTION & ANSWER

   

 வகுப்பு - 9 , தமிழ் 

இயல் - 3 , உள்ளத்தின் சீர் 

மொழியை ஆள்வோம் - வினா & விடை 

மொழியை ஆள்வோம்

தொகுப்புரை எழுதுக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

       இளமனூர்  அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 2.07.2019அன்று இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
பள்ளித் தலைமையாசிரியர் பரஞ்சோதி  டேவிட்  , சிறப்பான வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக
வந்த முனைவர் இளசை சுந்தரம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துகளைச் சிறந்த முறையில்
வெளியிட முடியும். தாய்மொழிவழி கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும், திருத்தமாகவும்
கற்றுக்கொள்ள முடியும். மாணவர்களைச் சிந்திக்க வைக்கமுடியும் என்றெல்லாம் கூறித் தாய்மொழியின்
இன்றியமையாமையைக் கூறினார்.


           கல்வியின் நோக்கம் சிந்தனைத் திறமையையும், முழுமையான மனிதத் தன்மையையும், உயிரினும் மேலான ஒழுக்கத்தையும் உருவாக்குவதே. மாணவர்கள் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு, ஒழுக்க
சிலர்களாகத் திகழவேண்டும் என்று, மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறிச் சிறப்புரையாற்றினார்.
மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட, விழா இனிதே முடிந்தது.

*****************   ***********   ************


பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.


             தென்னிந்தியாவின் அடையாளச் சின்னங்களாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக
மாட்டினங்களின் தாய் இனம் என்று, 'காங்கேயம்' கருதப்படுகின்றது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில்
இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள், சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள், ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச்செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில், காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1 ) பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும், ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று, கருதப்படுவது எது?

இ ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?

ஈ) மேற்கண்ட பத்தி, எதைக் குறிப்பிடுகிறது?

விடை : காங்கேயம் மாடுகள்


2 ) பொருந்தாத சொல்லைக் கண்டறிக.


அ) கர்நாடகம்

ஆ ) கேரளா

இ) இலங்கை

ஈ) ஆந்திரா

விடை : இ) இலங்கை


3. பிரித்து எழுதுக :

 கண்டெடுக்கப்பட்டுள்ளன

அ ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
இ ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன
ஈ ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

விடை : அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

4 ) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடு போற்றப்படுகின்றது. - இது
எவ்வகைத் தொடர்?


அ) வினாத்தொடர்

இ) செய்தித்தொடர்

ஆ) கட்டளைத்தொடர்

ஈ) உணர்ச்சித்தொடர்


விடை : இ) செய்தித்தொடர்


*****************   ***********  ************

Post a Comment

0 Comments