ஞாயிறு கொண்டாட்டம்
பல்சுவைத் தேர்வு
போட்டித்தேர்வில் வெற்றி! 12 - 12 - 21
வினா உருவாக்கம்
'பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
*************** ************* ************
1) சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் -----
அ) புரம்
ஆ) பட்டி
இ) பாக்கம்
ஈ) குளம்
2) கடற்கரையில் உருவான நகரம் -----
அ) பட்டி
ஆ) பாக்கம்
இ) பட்டினம்
ஈ) மேடு
3) ' வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்' - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ------
அ ) முக்கூடற்பள்ளு
ஆ) தமிழ்விடுதூது
இ ) உலா
ஈ) குற்றாலக்குறவஞ்சி
4) காவிரி பாயும் நாடு ------
அ) சோழநாடு
ஆ) பாண்டியநாடு
இ ) சேரநாடு
ஈ ) பல்லவநாடு
5)' மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் -------
அ) பாரதியார்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ ) பாரதிதாசன்
ஈ) வாலி
6) ' மணநூல் ' என்றழைக்கப்படும் நூல்----
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
7) எனக்கு வறுமையும் உண்டு , மனைவி
மக்களும் உண்டு.அவற்றோடு மானமும்
உண்டு என்று கூறியவர் -----
அ) தேவநேயப்பாவாணர்
ஆ) மறைமலை அடிகள்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) இலக்குவனார்
8) கூந்தன்குளம் பறவைகள் புகலிடம்
அமைந்துள்ள மாவட்டம் -----
அ) கன்னியாகுமரி
ஆ) திருநெல்வேலி
இ) காஞ்சிபுரம்
ஈ) இராமநாதபுரம்
9) ------ ஒரு இடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்குச் செல்லும் நிகழ்வு வலசை
போதல் எனப்படும்.
அ) விலங்குகள்
ஆ) மனிதர்கள்
இ) பறவைகள்
ஈ) பூச்சிகள்
10 ) ' நோய்க்கு மருந்து இலக்கியம் ' என்று கூறியவர் ------
அ) உ.வே.சா
ஆ) தெ.பொ.மீ.
இ) மீனாட்சி சுந்தரனார்
ஈ) ஔவை துரைசாமி
11) கூடல் எனவும் ஆலவாய்
எனவும் வழங்கப்படும் ஊர் ------
அ) மதுரை
ஆ) திருச்சி
இ) நெல்லை
ஈ) கோவை
12) ' வைதோரைக்கூட வையாதே !இந்த
வையம் முழுவதும் பொய்த்தாலும்
பொய்யாதே!' எனத்தொடங்கும் பாடலைப்
பாடிய சித்தர் ------
அ) பாம்பாட்டிச்சித்தர்
ஆ) காக்காச்சித்தர்
இ) பட்டினத்தார்
ஈ) கடுவெளிச்சித்தர்
13) ஆய கலைகள் மொத்தம் ------
அ) 44
ஆ) 54
இ) 60
ஈ) 64
14) உழவுத்தொழிலுக்குச் சிறப்புப் பெற்ற
நிலம் -----
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
15) விக்ரம் சாராபாய் விண்வெளி
அமைந்துள்ள மாநிலம் -----
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மகாராஷ்டிரா
16) நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
அ) ஜப்பான்
ஆ) ஹாலந்து
இ) நியுசிலாந்து
ஈ) நார்வே
17 ) ' மலைக்கோட்டை நகரம்'
என்றழைக்கப்படும் ஊர் -----
அ) மதுரை
ஆ) சென்னை
இ) திருச்சி
ஈ) சேலம்
18) மனித உரிமைகள் தினம் -----
அ) அக்டோபர் 10
ஆ) நவம்பர் 10
இ) டிசம்பர் 10
ஈ) ஜனவரி 10
19) மனிதன் முதன்முதலில் தெரிந்து கொண்ட உலோகம் -----
அ) தங்கம்
ஆ) வைரம்
இ) வெள்ளி
ஈ) செம்பு
20 ) கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான
ஒன்று எது?
அ) பால்
ஆ) மணல்
இ) காற்று
ஈ) மரம்
0 Comments