10 ஆம் வகுப்பு - தமிழ் - மதுரை - அலகுத் தேர்வு 2 - வினாக்களும் விடைகளும் / 10th TAMIL - UNIT TEST 2 - MADURAI - DECEMBER - 2021 - QUESTION & ANSWER

 


பள்ளிக்கல்வித்துறை - மதுரை மாவட்டம்

லகுத் தேர்வு - 2 ( 07 - 12 - 2021 ) 

10 - ஆம் வகுப்பு - தமிழ் 

காலம்: 1.30 மணி     மதிப்பெண்கள்: 50


பகுதி - 1 (மதிப்பெண்கள் : 6)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.   6 X 1=6


1 ) 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வரிடம் இறைவன் 

ஆ) நோயாளியிடம் மருத்துவர்

இ) இறைவனிடம் குலசேகராழ்வார்

ஈ) மருத்துவரிடம் நோயாளி

விடை : இ ) இறைவனிடம் குலசேகராழ்வார்


2 ) கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி . ........................ எனப் பெயரிட்டார்.

அ) கம்பராமாயணம்

ஆ) இராவண காவியம்

இ) இராமாவதாரம்

ஈ) சடகோபர் அந்தாதி

விடை : இ ) இராமாவதாரம்

3 ) தமிழினத்தின் பொதுச் சொத்து என..... நூலைக் குறிப்பிடுகிறார்  ம.பொ.சிவஞானம்.

அ) திருக்குறள்

ஆ) சிலப்பதிகாரம்

இ) கம்பராமாயணம்

ஈ) தொல்காப்பியம்

விடை : ஆ ) சிலப்பதிகாரம்

4 ) ' என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ------- ஆகும்.

அ) பால் வழுவமைதி

ஆ) கால வழுவமைதி

இ) மரபு வழுவமைதி

ஈ) திணை வழுவமைதி

விடை : ஈ ) திணை வழுவமைதி 

பாடலைப் படித்து விடை தருக.

வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியில் மறையப்

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;

5 ) இவ்வடிகளில் வெய்யோன் எனக் கூறிப்பிடப்படுவது

அ) இராமன்

 ஆ) பகலவன்

இ) இலக்குவன்

ஈ) குகன்

விடை : ஆ ) பகலவன்

6 ) விரிசோதி - இலக்கணக் குறிப்பு தருக.

அ) வினைத் தொகை

ஆ) விணையாலணையும் பெயர்

இ) பண்புத் தொகை

ஈ) உவமைத் தொகை

விடை : அ ) வினைத்தொகை

பகுதி - 2 (மதிப்பெண்கள் : 12) (பிரிவு - 1)

குறுகிய விடை தருக. மூன்று மட்டும்.

 (வினா எண். 10 கட்டாய வினா) 3X2=6.


7 ) கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் தருக.

       தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல்  பிறருக்கு உதவுபவர்

8 ) அ. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

விதி - வீதி

இயற்கையின்  விதியை மீறியதால்  நாம் நீருக்காக வீதியில் அலைகிறோம்.

ஆ) அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.

(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றாடராக மாற்றுக).

அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்.

9 ) வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

* நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையைப் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று , தனக்கு விருப்பமான புத்தகங்களை மிகக்குறைத்த விலைக்கு வாங்கினார்.

* உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு , பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.

* குறைந்த விலைக்கு நல்ல நூல் கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.

10 ) ' பொருள் '  எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 

பொருளல்ல தில்லை பொருள்


                                பிரிவு - 2

விடை தருக. (மூன்று மட்டும்). 3. X 2 = 6


11 ) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

அ) நாகப்பட்டினம் - நாகை

ஆ) திருநெல்வேலி - நெல்லை

12. கலைச் சொற்கள் தருக.

அ ) Symbolism - குறியீட்டியல்

ஆ) Document - ஆவணம்

13. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

அ) ............ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

விடை : வெள்ளை

ஆ) அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் -------

விடை : சிவந்தது

14. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைவகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

தஞ்சம் - நேர் நேர் - தேமா

எளியர் - நிரை நேர் - புளிமா

பகைக்கு - நிரைபு - பிறப்பு 


         பகுதி - 3 (மதிப்பெண்கள் : 9)

சுருக்கமான விடை தருக. (மூன்று மட்டும்) வினா எண் :  17 கட்டாய வினா. 3 X 3= 9


15. 'உறங்குகின்ற கும்பகன்ன' எழுந்திராய் எழுந்திராய் காலதூதர் கையிலே "உறங்குவாய் உறங்குவாய்"? கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

             உறங்குகின்ற கும்பகன்னனே ! உங்களுடைய பொய்யான மாய வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சி அடையத் தொடங்கிவிட்டது. அதனைக்காண எழுந்திருப்பாய் என்று கூறி அவனை எழுப்பினர்.

     " காற்றாடி போல வில்லைப் பிடித்து எமதூதர்களின் கையில் கிடந்து நிரந்தரமாக உறங்குவாயாக ! " எனச் சொல்கிறார்கள்.


16. ஐவகை நிலங்கள் யாவை? பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

ஐவகை நிலங்கள் 

* குறிஞ்சி 

* முல்லை 

* மருதம் 

* நெய்தல்

* பாலை

பொழுது இரண்டு வகைப்படும்.

* பெரும்பொழுது 

* சிறுபொழுது


17 ) அருளைப் பெருக்கி - எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.


அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.


18 ) விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை எட்டு வகைப்படும்.

அவை 

* சுட்டு விடை

* மறை விட

* நேர் விடை

* ஏவல் விடை

* வினா எதிர் வினாதல் விடை

* உற்றது உரைத்தல் விடை 

* உறுவது கூறல் விடை 

* இனமொழி விடை 


                               பகுதி - 4

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.               3 X 5 = 15


19. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டிய அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புநர்

அஅஅ,

1. பாரதி  நகர்,

மதுரை.

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,

******* நாளிதழ்,

மதுரை  அலுவலகம்,

மதுரை மாவட்டம்.


மதிப்பிற்குரிய நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு , 

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டிக் கடிதம்.

         வணக்கம், தங்கள் நாளிதழில் வெளியிடும் சிறப்பு மலராகிய ‘பொங்கல் மலர்'வெளியீட்டில் நான் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரை உழவுத் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்ஆகும். இக்கட்டுரையை தங்கள் பதிப்பக முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.

       சிறப்புக் கட்டுரையில் குறிப்பாக “உழுவார் உலகத்தார்க்கு ஆணி' உழவர்கள்அச்சாணியை போன்றவர்கள் என்று வள்ளுவர் கூறியுள்ளார். உழவுத்தொழிலே உணவுத் தொழிலாகும். இந்த உலகம் சுழல்வதே உழவர்களால் மட்டுமே “சுழன்றும் ஏர்பின்னது உலகம்'' என்று உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்யக்கூடிய செய்தியை எழுதியுள்ளேன். உழவுத் தொழிலை மேம்படுத்தபுதிய முறைகளை கையாள வேண்டும் என்கிற செய்தியைப் பதிவு செய்துள்ளேன். அதனை வாசித்துபின் மக்கள் படித்துப் பயன்பெற பொங்கல் மலரில் வெளியிட வேண்டுகிறேன்.

                                  நன்றி!

                        தங்கள் உண்மையுள்ள , 

                                        தமிழரசன்.


இடம்: மதுரை

நாள்: 07 - 12 - 2021


பெறுநர்

ஆசிரியர் அவர்கள் , 

*******நாளிதழ் , 

மதுரை பதிப்பு அலுவலகம் ,

மதுரை மாவட்டம்.

20. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

21. கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக (தனித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது)


22. 'அன்பும் அறனும் உடையத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது' - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

             இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோள்  முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

        செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள்கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது'. 

                                          - குறள்: 45

     இக்குறளில் அன்பு, அறன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரியவிளைவுகளாகப் பண்பு, பயன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள்கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப்பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக - நிரல்நிறையாக - நிறுத்திப் பொருள்கொள்வதால்,இப்பாடல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்.

****************      ********   **************

                           பகுதி - 5 


(மதிப்பெண்கள் - 8) 1 X 8 = 8


23. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

                           (அல்லது)

24, உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் - சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.


*************   ********   ***********

விடை தயாரிப்பு

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410

*************   ************   ******

Post a Comment

0 Comments