TNPSC - தேர்வில் எளிதில் வெற்றி
பகுதி - இ
தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
பகுதி - இ : 1
பாரதிதாசன்
* இயற்பெயர் - சுப்புரத்தினம்
* பெற்றோர் - கனகசபை - இலட்சுமி
* ஊர் - புதுச்சேரி
* 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
* புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது
"எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா"
என்ற பாடல். இதனைப் பாரதி "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது” எனக் குறிப்பிட்டுச் சுதேசிமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
நூல்கள்
* பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1, 2, 3,
* இசை அமுது தொகுதி 1, 2
* பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்பு விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, கண்ணகி, புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், கழைக்கூத்தியின் காதல், தமிழச்சியின் கத்தி, அமைதி, இளைஞர் இலக்கியம், சௌமியன், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம், இரண்யன் அல்லது இணையற்ற வீரன், காதலா கடமையா?, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
நடத்திய இதழ் 'குயில்'
மேற்கோள்
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்”
* "பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்
பொதுவுடையோன் திருட்டைக் களைவிக்கின்றான்"
* "தமிழுக்கும் அமுதென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
* “எங்கள் வாழ்வும் 'எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
0 Comments