TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - பொதுத்தமிழ் - பகுதி இ - புதுக்கவிதை - தருமு சிவராமு ( பிரமிள் ) / TNPSC - TAMIL - PUTHUKKAVITHAI - PRAMIL

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 3

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை 

தருமு சிவராமு

20.04.1939 இல் இலங்கையில் உள்ள திரிகோண மலையில் பிறந்தவர். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டவர்.

* புனைப்பெயர்கள்: பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்.

எழுதிய நூல்கள்

கவிதை நூல்கள்: கண்ணாடி உள்ளிலிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள்.

* சிறுகதைத் தொகுப்பு: லங்காபுரிராஜா, பிரமிள் படைப்புகள்

* குறுநாவல்: ஆயி, பிரசன்னம்
நாடகம்: நட்சத்ரவாசி

* உரைநடை: மார்க்சும் மார்க்ஸியமும்.

06.01.1997 இல் இயற்கை எய்தினார்.

மேற்கோள்:
“இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது."

" காவியம் " என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை.

" கரித்துண்டு ஒன்றுக்கு

சிவப்பு கலர் தோய்த்து

நெருப்பின் பெயரை 

இட்டுவிட்டால் என்ன அது

சுட்டுப்பொசுக்கிடுமோ 

இல்லை வெறுமே

சிவப்பாய்க் கிறுக்குமோ " 

***************   ***********   *************

Post a Comment

0 Comments