TNPSC - தேர்வில் வெற்றி ! பொதுத்தமிழ் - பகுதி - இ , தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - பகுதி - 1 , பாரதியார் / TNPSC - TAMIL SUBJECT - PART - C - TAMIL ARIGNARKALUM TAMILTH THONDUM - BHARATHIYAR

 TNPSC - தேர்வில் எளிதில் வெற்றி

பகுதி - இ 

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

பகுதி - இ :1



பாரதியார்

இயற்பெயர் சுப்பிரமணியம் - சுப்பையா என அழைக்கப்பட்டார்

பெற்றோர்: சின்னசாமி ஐயர் - லட்சுமி. அம்மாள்

ஊர் : எட்டயபுரம்

வாழ்நாள்: 11.12.1882 முதல் 11.9.1921 வரை 39 ஆண்டுகள்.

* எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் 'பாரதி' என்ற பட்டம் அளித்தனர்

* தன்னை 'ஷெல்லிதாசன்' என்று அழைத்துக்கொண்டார்

* பாரதியின் புதுக்கவிதை முன்னோடி வால்ட் விட்மன்.

பாடியவை

சுதந்திரப் பாடல்கள், தேசியப் பாடல்கள், தலைவர் வாழ்த்துக்கள், பக்திப் பாடல்கள், சமூகப் பாடல்கள், பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திசூடி, முப்பெரும் பாடல்கள், வசன - கவிதை

முப்பெரும் பாடல்கள் என்பன:


1. கண்ணன் பாட்டு 

2. குயில் பாட்டு 

3. பாஞ்சாலி சபதம்


மேற்கோள்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்”

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்துவோம்”

“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே”

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்
சகத்தினை அழித்திடுவோம்”


"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்”


Post a Comment

1 Comments