குழந்தைகள் தினம் - மாணவர் கவிதை & ஓவியம் / CHILDRENS DAY - KAVITHAI & OVIYAM

 

நவம்பர் 14 - நேரு பிறந்த நாள்

குழந்தைகள் தினம் - சிறப்புக்கவிதை 

*****************    **************   *********

குழந்தைகளே 

சிறகை விரித்து பறக்கும் சிட்டுக்குருவி !

வண்ண வண்ண உடைகள் அணியும்

வண்ணத்து பூச்சிகள் !

துள்ளி ஓடும் மான்கள் !

மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள் !

சேர்ந்துண்ணும் காக்கைகள் !

சிந்தனை பலம் கொண்ட எறும்புகள் !

நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள் !

சிற்பிக்குள் முத்துக்கள் !

இசை பாடும் குயில்கள் !

கற்பனைக்கு எட்டா அதிசயங்கள் !

மழலைகளே

உங்களைப்போல் துள்ளி விளையாட

 ஆசைதான் !

விண்ணில் பறக்க ஆசை தான் !

மண்ணிலும் பறக்க ஆசை தான் - ஆனால்

சிறகுகளோ உடல் வலிமையோ இல்லை

என்னிடம்

ஆனால் - இன்று

ஒரு நாள் மட்டும் 

குழந்தையாகிறேன்

உங்களைச் சிரிக்க வைத்து என் கவலை

மறக்கிறேன் !

மருந்துகளைத் துறக்கிறேன்

மகிழ்ச்சியில் பறக்கிறேன்

தினம் தினம் இத்திருநாள் கிடைக்காதா என 

ஏங்குகிறேன்!

கவிஞர்.FATHIMA INFANTA , 9th 

***************     ************** *************

ஓவியம் - A.SILVIYA - 7th 



******************   ***********   ************

ஓவியம் - S.YUVARANI , 10 , THOOTHUKUDI.




******************   *************    *********

Post a Comment

0 Comments