குழந்தைகள் தின விழா
14 • 11 • 2021
நேரு பிறந்த நாள் விழா
" பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்து
மக்கட்பேறு அல்ல பிற."
குறள்-61
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளை விட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை - என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க , அறிவில் சிறந்த குழந்தைகளை உருவாக்கி நாட்டின் வளம்சேர்த்து, நிலை நிறுத்த விழைந்தார் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
மனிதருள் மாணிக்கம் , நவ பாரத சிற்பி , ஆசிய ஜோதி, அணையா விளக்கு என அலங்கரிக்கப்பட்ட இந்திய மாமணி முதல் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் - 14 -ம் நாளை குழந்தைகள் தினமாக நாடெங்கும் கொண்டாடி மகிழப்படுகிறது. எதிர்கால இந்தியாவின் தூண்களாக , தாங்கும் வேர்களாக எண்ணி ,நேரு அவர்களால் விரும்பிக் கொண்டாடிய குழந்தைகளை போற்றிக் கொண்டாடும் தினமாக பெருமிதம் கொள்கிறோம். ஒற்றை ரோஜா பிரியரை, பாசத்தலைவனைக் கண்ட நேசக் குழந்தைகள் "நேரு மாமா" என அழைத்து மகிழ்ந்தனர்.இவ்வாறு குழந்தைகளைப் போற்றியத் தலைவனையும் , தலைவனைப் போற்றியக் குழந்தைகளையும் கொண்டாட ஓர் நாள் அது குழந்தைகள் தின நாள்.
உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889 -ம் ஆண்டு நவம்பர் 14 - ம் நாள் மோதிலால் நேரு - சொரூப ராணி அம்மையார் இணையரின் அற்புத மகனாக பிறந்தார் ஜவஹர்லால் நேரு. உலக குழந்தைகள் நல வாழ்வு குறித்த சர்வதேச மாநாட்டு1925 - ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்றது . அம்மாநாட் டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் கல்வி குறித்து அறிவுறுத்தப் பட்டது.இதன் விளைவாக 1954- ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை சர்வ தேச குழந்தைகள் தினம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டது. இதுவே பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு தினத்தில் கொண்டாடப் படுகின்றது. உலகம் முழுவதும் நவம்பர் 20 - ஆம்நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில் நவம்பர் 14 - ம் நாளையே குழந்தைகள் தினமாகக்கொண்டாடப் படுகின்றது. இவ்வாறாக பூவாக மலர்ந்து மகிழும் குழந்தைகளைப் போற்றவும், கொண்டாடவும் ஒரு நாளைக் குறித்தது அது நவம்பர் 20 - ம் நாள். இந்த நாளை உலக குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது.இந்தியாவில் நவம்பர் 14 - ம் நாளைக் கொண்டாடி வருகின்றோம்.. வருங்கால இந்தியாவை நிலைபெறச் செய்யும் நாளையத் தலைவர்களாம், இன்றைய குழந்கள் என்ற மகத்துவம் மிக்க உண்மை இளம்மனங்களில் உணர்த்தவே இக்கொண்டாட்டம் பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றது.
மேலும் மாணவர்களுக்கான பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலம் குறித்து கூறும் பொழுது " இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள். எனவே எப்படி வளர்க்கிறோம் என்பதே எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
நினைவில் நின்ற நேரு மாமா :
நாட்டு நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு ஓய்வில்லாமல் உழைத்தத் தலைவர்.அரசியல் தேர்ச்சியும் , அனுபவ முதிர்ச்சியும் பெற்றப்போதும்.குழந்தை மனத்துடனே விளங்கினார். சுதந்திர இந்தியாவின் முன்னேற்றம் காண பல செயல் திட்டங்களை வகுத்து வழி நடத்திய போதிலும் ,நாடெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல் நிலை, கல்வி முன்னேற்றம் சார்ந்த பல திட்டங்களை நிறைவேற்றினார். தமது கடுமையான பணிச் சூழலிலும் குழந்தைகளைக் கண்டு உரையாடி மகிழ்ந்தார். இவரது அன்பில் திளைத்த குழந்தைகள் நேரு மாமா என அழைத்து மகிழ்ந்தனர். அவ்வாறு அழைத்து மகிழ்ந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி நேருவின் கனவை நனவாக்கி சிறந்த மனி தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நலவாழ்வு காண..:
எதிர்கால இந்தியாவை , ஏற்றம் மிக்கதாக மாற்றும் சக்தி குழந்தைகளிடமே உள்ளதென தன் தொலைநோக்குப் பார்வையால் நம்பிக்கை கொண்டார் நேரு அவர்கள். நாளைய வாழ்வு நலம்பெற இன்றைய செயல்களே வழிகாணுகின்றன. வீட்டின் முன்னேற்றமும், நாட்டின் முன்னேற்றமும் சிறப்பாக அமைய அடித்தளமிடுவது குழந்தைகள் கற்கும் நற்பண்புகளே. எனவே குழந்தைப் பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும்.குழந்தைகளிடம் ஏற்றத் தாழ்வுகள் பாராட்டுவது தீமையைப் பயப்பதாககும். அனைத்துக் குழந்தைகளிடமும் இயல்பாக பழகவிட வேண்டும் .இவை மாணவர்களிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் , சகோதரத்துவத்தையும் உருவாக்கி ஒற்றுமை வளர வழிகாணும். இது வும் கற்பிதமேயாகும். குழந்தைகள் பற்றி நேரு அவர்கள் கூறியது..." குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து அவர்கள் வளர்ந்து வரும் வேலையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள் என்று மொழிகின்றார் ஜவஹர்லால் நேரு.
இன்றைய நிலையில் குழந்தைகள் கல்வியிலும் , தனித்தன்மையிலும் சாதித்து வரும் வேளையில் , அவர்கள் மீதான வன்முறை மற்றும் தாக்குதலையும் ஒழிக்கவும் , அக்கொடுமைகளில் இருந்து விடுபடவும் முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பளித்து காப்பது நமது அனைவரின் கடமையாகும். இந்த பாசக் குழந்தைகளுக்கும் , தேசத்தலைவனுக்கும் இடையிலான அன்புப் பாலம் உலகம் உள்ள வரையிலும் உறுதி குலையாமல் நாட்டை நல்வழிப்படுத்தும் என்பதில் பெருமிதம் கொண்டு வணங்கி மகிழ்வோம்.!
0 Comments