ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்பவை கற்றபின் - பாடப்பகுதி வினா & விடை / 9th TAMIL - EYAL 1 - KARPAVAI KATRAPIN - QUESTION & ANSWER

 

வகுப்பு - 9 . தமிழ்

இயல் - 1 

கற்பவை கற்றபின் 

பாடப்பகுதி வினாக்களும் விடைகளும்

1.கற்பவை கற்றபின்

தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியைவிட்டு நீக்கினான் - இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.

பதவியை விட்டு நீங்கினான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள், திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர் - இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

மொழியியல் அறிஞர்கள், திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே - இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.

உண்டேன் தமிழ்த்தேனை.

ஈ) திராவிட மொழிகளை, மூன்று மொழிக்குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் 

இத்தொடரைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.

திராவிட மொழிகள், மூன்று மொழிக்குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன், சிறந்த பள்ளியில் படித்தார் - இத்தொடரை பிறவினைத் தொடராக மாற்றுக.

நிலவன், சிறந்த பள்ளியில் படிக்க வைக்கப்பட்டார்.


Post a Comment

0 Comments