12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - உயிரினும் ஓம்பப்படும் - இயங்கலைத்தேர்வு - வினா & விடை / 12th TAMIL - EYAL 1 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பொதுத்தமிழ் - இயல் 1 - '

உயிரினும் ஓம்பப்படும்' 

இயங்கலைத்தேர்வு - 1

வினா உருவாக்கம் - திருமதி.தேன்மொழி ,தமிழாசிரியை , கரூர்.

பசமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் , மதுரை ( பைந்தமிழ்

வலையொளி - Green Tamil - You Tube -

பசுமையும் பைந்தமிழும்)


******************    **********   ***********

1) இளந்தமிழே' - கவிதை இடம்   பெற்றுள்ள நூல்

அ ) ஒளிப்பறவை

ஆ ) சர்ப்பயாகம்

இ ) சூரிய நிழல்

ஈ ) நிலவுப்பூ

2) தனியாழி என்பது எவ்வகைப்   புணர்ச்சி?

அ )  பண்புப் பெயர் புணர்ச்சி

ஆ ) குற்றியலுகரப் புணர்ச்சி

இ ) உடம்படுமெய் புணர்ச்சி

ஈ ) திசைப்பெயர் புணர்ச்சி


3) தமிழின் விரிவை உணர்த்த புலவர் கையாளும் தொடர் -

அ ) வலிமை மிக்கது

ஆ ) நிலத்தினும் பெரிதே

இ ) வானினும் உயர்ந்தன்று

ஈ ) கடலினும் ஆழமானது

4) ' நிலத்தினும் பெரிதே' என்னும் தொடர் உணர்த்துவது -

அ  ) விரிவை

ஆ ) ஆழத்தை

இ ) பரப்பை

ஈ ) அனைத்தையும்

5) தன்னேர் இலாத தமிழ்' என்னும் பாடலில் அமைந்துள்ள அணி

அ ) பொது வேற்றுமை அணி

ஆ ) சொல் வேற்றுமை அணி

இ ) பொருள் வேற்றுமை அணி

ஈ ) இட வேற்றுமை அணி

6) நம் பண்பாட்டின் அடையாளமாக விளங்குவது

அ ) தமிழ் மொழி

ஆ ) தெலுங்கு மொழி

இ ) ஆங்கில மொழி

ஈ ) கன்னட மொழி

7) சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்

அ ) சென்னை

ஆ ) பாரதிதாசன்

இ ) பாரதியார்

ஈ ) காமராசர்

8) ' கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே!
சீறி வா , வா! - இவ்வடிகள்   இடம்பெற்றுள்ள நூல் ----

அ ) ஒரு கிராமத்து நதி

ஆ ) சர்ப்பயாகம்

இ ) நிலவுப்பூ

ஈ ) சூரிய நிழல்


9 ) தமிழின் விரிவை ----- எனப் 
போற்றுவர்

அ ) நிலம்

ஆ ) கடல்

இ ) வானம்

ஈ ) மலை

10 ) ' ஓங்கலிடை' எனத் தொடங்கும் தண்டியலங்கார பாடலின் பாவகை -

அ ) இன்னிசை வெண்பா

ஆ ) நேரிசை வெண்பா

இ ) ஆசிரியப்பா

ஈ) வஞ்சிப்பா


11) ' ஏங்கொலி நீர்' - பொருள் ----

அ ) ஆகாயம்

ஆ ) மலை

இ ) பூ

ஈ ) கடல்

12) ' தண்டியலங்காரம் ' எந்த வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்

அ ) நேமிநாதம்

ஆ ) அவந்தி சுந்தரி

இ ) காவியதர்சம்

ஈ ) மேகசந்தேசம்

13 ) சிற்பி பாலசுப்பிரமணியம்
அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நூல் ---

அ ) பூஜ்யங்களின் சங்கிலி

ஆ) ஒளிப்பறவை

இ ) சர்ப்ப யாகம்

ஈ ) ஒரு கிராமத்து நதி


14) ' மீண்டுமந்தப் பழமை நலம்
புதுக்குதற்கு' - கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்

அ ) யாப்பருங்கலக்காரிகை

ஆ ) தண்டியலங்காரம்

இ ) தொல்காப்பியம்

ஈ ) நன்னூல்


15 ) தண்டியலங்காரம் குறிப்பிடும் மலை -----

அ ) கொல்லிமலை

ஆ ) சேர்வராயன் மலை

இ ) பொதிகை மலை

ஈ ) ஜவ்வாது மலை

16) கவிதையின் இயங்காற்றல் என்பது

அ ) ஒலி

ஆ ) சொல்

இ ) பொருள்

ஈ ) நடை

17) பாடலின் தளத்தைப் பண்படுத்துவன -----

அ ) எழுத்து , சொல் , இலக்கணம்

ஆ )  சொல், பொருள் , யாப்பு

இ ) ஒலி , சொல் , சொற்றொடர்

ஈ ) சொல் , வடிவம் , கற்பனை


18) சங்கப் பாடல்களில் தொடரியல் பிறழ்வு பெரிதும் காணப்படுவது

அ ) பாடலின் முதலில்

ஆ ) பாடலின் நடுவில்

இ ) பாடலின் இறுதியில்

ஈ ) பாடலின் மூவிடத்திலும்


19 ) தமிழில் ' இழுமெனும் மொழியாள் விழுமியது பயக்கும் வகையில் ------
படைக்கப்பட்டுள்ளன.

அ ) இதிகாசங்கள்

ஆ ) இலக்கியங்கள்

இ ) புராணங்கள்

ஈ ) காப்பியங்கள்

20) ஒலிக்கோலங்களும் , சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் காணப்படும் நடையியல் கூறு -----

அ ) கட்டுரை

ஆ ) செய்யுள்

இ ) கவிதை

ஈ ) உரைநடை


*****************   *************    ***********




Post a Comment

2 Comments