ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2013 - 2014
வினாக்களும் விடைகளும் - பகுதி - 3
100 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2013 - 2014
QUESTION & ANSWER - PART - 3
**************** ************* **********
101. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாகக் கருதப்படும் இடம்
A) கபாடபுரம்
B) உத்திர மதுரை
C) காஞ்சிபுரம்
D) கரந்தை
102 ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
A) பூரிக்கோ
B) பாண்டியன் மாறன் வழுதி
C) பெருந்தேவனார்
D) உருத்திரசன்மனார்
103. பொருநராற்றுப்படை எம்மன்னனின் சிறப்பைப் பாடுகிறது?
A) கரிகால் சோழன்
B) இளந்திரையன்
C) பாண்டியன் நெடுஞ்செழியன்
D) நல்லியக் கோடன்
104. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
A) இரண்டாம் பத்து - பல்யானை செல்கெழு குட்டுவன்
B) மூன்றாம் பத்து - களங்காய் கண்ணி நார்முடிச்சேரல்
C) நான்காம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான்
D) ஐந்தாம் பத்து - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
105."ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டும்” எனக் கூறியவர் யார்?
A) நச்சினார்க்கினியர்
B) பேராசிரியர்
C) அடியார்க்கு நல்லார்
D) இளம்பூரணர்
106. எந்தக் கல்விக் குழுவால் இடைநிலை அளவில் பன்நோக்குக் கல்விமுறை பரிந்துரைக்கப்பட்டது?
A) இராமமூர்த்தி குழு
B) தாராசந்த் குழு
C) ஹன்டர்ஸ் குழு
D) ஹார்டாக் குழு
107. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி ஆண்டு 'கல்வி' இணைக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
A) 1974
B) 1975
C) 1976
D) 1977
108. “14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையையும் பணியில்
அமர்த்தக்கூடாது” என்பது இந்திய அரசியல் சாசனம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது:
A) சட்டப்பிரிவு 23
B) சட்டப்பிரிவு 45
C) சட்டப்பிரிவு 30
D) சட்டப்பிரிவு 45 (A)
109. NCERT 1979 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘கல்வியில் சமூக, ஒழுக்க மற்றும் ஆன்மிக விழுமங்கள்' என்ற பதிப்பில்
விழுமங்கள் கல்வியின் மூலம்
போதிக்கப்படலாம் என்று வரையறுத்தது.
A) 90
B) 84
C) 45
D) 36
110. மனித சக்தி திட்டமிடல் வகை செயல்பாட்டினால் அதிக தாக்கத்திற்குள்ளாகிறது.
A) ஏற்றுமதி செய்தல்
B) இறக்குமதி செய்தல்
C) இருத்தி வைத்தல்
D) இடம்பெயர்தல்
111. “சொற்களைச் சிறந்த முறையில் வைப்பதே வசனம். சிறந்த
சொற்களைச் சிறந்த முறையில் வைப்பதே கவிதை” என்று கூறியவர்
A) ஷெல்லி -
B) டி.எஸ். எலியட்
C) கோல்ரிட்ஜ்
D) கீட்ஸ்
112. ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப் பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதை ஆசிரியர்
A) கல்கி
B ) அகிலன்
C) சுஜாதா
D ) லா.ச.ராமாமிர்தம்
113. நிஜ நாடக இயக்கம் நிகழ்த்திய நவீன நாடகம்
A) பலூன்
B ) துர்க்கிர அவலம்
C) ஊர்வலம்
D ) பலி ஆடுகள்
114. தொல்காப்பியத்தில் ஆய்தல்' என்ற சொல்லுக்குக் கூறப்படும் பொருள்
A) உள்ளதன் நுணுக்கம்
B) நுட்பமாய் அறிதல்
C) தேடுதல்
D) கூர்ந்து கவனித்து அறிந்து கொள்ளுதல்
115. 'அர்த்தங்கள் மையம் இழந்தவை; நிலையற்றவை; ஒத்தி
வைப்புக்குள்ளானவை' விளக்கிய கோட்பாடு
A) பின் நவீனத்துவம்
B) பின் காலனியம்
C) நவீனத்துவம்
D) பின் அமைப்பியல்
116. புறப்பொருள் வெட்சிப் படலத்தில் 'உண்டாட்டு' எனப்படுவது
A) எதிர்த்துப் போரிடுவது
B) பகைவர் அரண்களைக் காப்பது
C) கள் அருந்திக் களிப்பது
D) ஆநிரைகளைப் பகிர்ந்து வழங்கல்
117. வெட்சிப் படலத்தில் 'துடிநிலை' என்று கூறப்படுவது
A) குடிப்பழைமையைப் புகழ்தல்
B) கொற்றவையைப் புகழ்தல்
C) மன்னரைப் புகழ்தல்
D) வீரர்களைப் புகழ்தல்
118. கரந்தைப் பூ பூக்கும் காலம்
A) மாசி, பங்குனி
B) சித்திரை, வைகாசி
C) ஐப்பசி, கார்த்திகை
D) மார்கழி, தை
119. வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்துக் கூறும் துறை
A) குடிநிலை
B) வாள்நிலை
C) குடைநிலை
D) கொற்றவைநிலை
120. 'வட்கார் மேல் செல்வது'
A) காஞ்சித் திணை
B) வெட்சித் திணை
C) கரந்தைத் திணை
D) வஞ்சித் திணை
121. இரண்டு எதிரிடையான இலக்குகளுடைய மனப்போராட்டம்
A) விலகு - விலகு
B) விலகு - அணுகு
C) அணுகு - அணுகு
D) இவை எதுவும் இல்லை
122. கல்விப் புதுமையின் குறிக்கோளானது
A) கற்றலில் மிகை மாற்றத்தை உருவாக்குவது
B) கற்றலில் குறை மாற்றத்தை உருவாக்குவது
C) கற்றலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது
D) (A) மற்றும் (B) இரண்டும்
123. எந்த ஆசிரமம் 'மனித ஒற்றுமையே உயர்வானது', என்பதைப் பிரதிபலிக்கிறது?
A) இராமகிருஷ்ண மடம்
B) விவேகானந்தர் ஆசிரமம்
C) ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்
D) காந்தியடிகள் ஆசிரமம்
124. கல்வியில் 'ஆணுக்குப் பெண் சமம்' என்ற கருத்தை முதன்முதலில் பிரதிபலித்தவர்
A) விவேகானந்தர்
B) ரூசோ
C) காந்தியடிகள்
D) தயானந்த சரஸ்வதி
125. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் முகப்புரையில் விவரிக்கப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று :
A) சமத்துவம்
B) அதிகார தன்மை
C) வேறுபடுத்துதல்
D) தனிமைப்படுத்துதல்
126. பெரும் பொழுதின் வகைகள்
A) ஐந்து வகைப்படும்
B) ஆறு வகைப்படும்
C) எட்டு வகைப்படும்
D) மூன்று வகைப்படும்
127. 'மல்குகார்மாலை'
A) நெய்தற்கு உரிததே
B) மருதத்திற்கு உரிததே
C) முல்லைக்கு உரிததே
D) குறிஞ்சிக்கு உரிததே
128. முல்லைத் திணைப் பறை
A) தொண்டகப் பறை
B ) துடி
C) கோட் பறை
D) ஏற்றுப் பறை
129. அகப்பொருள் மெய்யுறு புணர்ச்சியின் உட்பிரிவுகள்
A) ஏழு வகைப்படும்
B) பத்து வகைப்படும்
C) பன்னிரண்டு வகைப்படும்
D) ஆறு வகைப்படும்
130. களவிற்குரிய கிளவித் தொகைகள்
A) பதினேழு கிளவித் தொகைகள்
B) பதினைந்து கிளவித் தொகைகள்
C) பத்துக் கிளவித் தொகைகள்
D) பதினெட்டுக் கிளவித் தொகைகள்
131. 'ஞானபீட விருது பெற்ற புதினம்
A) அகல் விளக்கு
B) அலை ஓசை
C) வேங்கையின் மைந்தன்
D) சித்திரப்பாவை
132. வா.செ. குழந்தைசாமியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற திறனாய்வு நூல்
A) திருக்குறள் நீதி இலக்கியம்
B) வாழும் வள்ளுவம்
C) பாரதி காலமும் கருத்தும்
D) கம்பன் புதிய பார்வை
133. ஏறு தழுவுதலைக் கதைக்களமாகக் கொண்ட புதினம்
A) வளைக்கரம்
B) அழுக்குகள்
C) வாடிவாசல்
D) கல்லும் மண்ணும்
134. 'குடும்பத்தேர்' சிறு கதையின் ஆசிரியர்
A) ஆதவன்
B) பூமணி
C) நகுலன்
D) மௌனி
135. பட்டியல்-1 பட்டியல்-11 உடன் பொருத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல்-1 பட்டியல்-II
a) வித்தன் 1. கமலாவின் கல்யாணம்
b) கு. அழகிரிசாமி 2. அக்பர் சாஸ்திரி
c) கல்கி 3. மவராசர்கள்
c) தி. ஜானகிராமன் 4. திரிபுரம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 2 4 1. 3
D) 3 - 2 4 1
136. ஆற்றுப்படைகளில் அடியளவில் பெரிய நூல் எது?
A) திருமுருகாற்றுப்படை
B) சிறுபாணாற்றுப்படை
C) மதுரைக்காஞ்சி
D) பெரும்பாணாற்றுப்படை
137. 'வஞ்சி நெடும்பாட்டு' என வழங்கப் பெறும் நூல் எது?
A) மதுரைக் காஞ்சி
B) பட்டினப்பாலை
C) முல்லைப்பாட்டு
D) குறிஞ்சிப்பாட்டு
138. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன் யார்?
A) கரிகால் சோழன்
B) இராஜராஜ சோழன்
C) கோச்செங்கணான்
D) கோப்பெருஞ் சோழன்
139. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
A) குறிஞ்சிக் கலி - இளநாகனார்
B) முல்லைக் கலி - கபிலர்
C) மருதக் கலி - நல்லுருத்திரன்
D) பாலைக் கலி - பெருங்கடுங்கோ
140. நக்கீரர் பத்துப் பாட்டில் பாடிய நூல்கள்
A) நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி
B) திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
C) திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி
D) நெடுநல்வாடை, பட்டினப்பாலை
141. ......... என்பவர் கற்றல் மாற்றத்தினை விளக்குவதற்காக ஒத்தக் கூறுகளின் கோட்பாட்டினை உருவாக்கினார்.
A) பாவ்லோவ்
B) குத்தையர்
C) வுட்வர்த்
D) தார்ண்டைக்
142. புலன் உணர்வு தகவல்களுக்கு விளக்கம் தருவதில் மேம்பட்ட அறிதலுக்கு உட்படுகிறது.
A) திரிபுக்காட்சி
B) புலன்காட்சி
C) புலன் உணர்வு
D) இல்பொருள் காட்சி
143. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சிக்கல் தீர்க்கும் திறன், வயது சார்ந்து வளர்ச்சி அடையும்.
II. இவ்வளர்ச்சி, வேகம் மற்றும் துல்லியம் இவை இரண்டிலும் அமையும்.
சரியான விடையளி :
A) I சரியான பதில் II தவறானது
B) 1 மற்றும் II தவறான பதில்
C) II சரியான பதில் l தவறானது
D) I மற்றும் II சரியான பதில்
144. முயன்று தவறி கொள்கையை வழங்கியவர்
A) இவான், பாவ்லோவ்
B) எட்வர்ட் எல். தார்ன்டைக்
C) ஸ்கின்னர்
D) ஹல்
145. எபிங்காஸின் சோதனை எதனுடன் தொடர்புடையது?
A) நினைவு வளைவு
B) மறதி வளைவு
C) கற்றல் வளைவு
D) இவை எதுவும் இல்லை
146. 'ஆதி நிகண்டு' என அழைக்கப்பெறுவது எது?
A) சூடாமணி நிகண்டு
B) பிங்கல நிகண்டு
C) திவாகர நிகண்டு
D) சேந்தன் திவாகரம்
147. 'கம்பராமாயணம்' நூலுக்குக் கம்பர் சூட்டிய பெயர் யாது?
A) இராமாவதாரம்
B) கம்பராமாயணம்
C) கம்பநாடகம்
D) கம்பநாட்டான் கதை
148. வினா-விடை' வடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம் எது?
A) கிஸ்ஸா
B) நாமா
C) பலசந்தமாலை
D) மசாலா
149. 'உடம்பால் அழியின் உயிரால் அழிவர்'- யாருடைய கூற்று?
A) திருவாதவூரர்
B) அப்பர்
C) திருமூலர்
D) சம்பந்தர்
150. விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர்
B) தரணி முழுதுடையான்
C) ஞானதேவன்
D) தேரியன் மாதேவி
0 Comments