ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 9 தமிழ்ப்படைப்பாளர்கள் / 7th TAMIL - ACTIVITY 9 - QUESTION & ANSWER

 

ஏழாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

தமிழ்ப் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் குறித்துப் பேசுதல்

கற்றல் விளைவு:

கேட்ட அல்லது படித்த பல்வேறு வகை இலக்கியங்கள் பற்றிப் பேசவும் அவற்றின் மீதான விவாதம் நடத்தவும் பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பளித்தல்.

கற்பித்தல் செயல்பாடு:

புதுவையில் தோன்றி தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பலர். அவர்களுள்

பாரதிதாசன், வாணிதாசன், தமிழ்ஒளி, திருமுருகன், பிரபஞ்சன் ஆகியோர் ஆற்றிய பணிகள் குறித்து அட்டவணையில் பார்ப்போம்.



மாணவர் செயல்பாடு:

1. மாணவர் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்த தமிழ்க்கவிஞர் ஒருவரின் பெயரைக் கூறி அவர்தம் சிறப்பை எடுத்துரைத்தல்,

2.மாணவர் ஒருவர் நூல் பெயரைக்கூற மற்றொருவர் எழுதியவரின் பெயரைக் கூறுதல்.

3. உங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள எவையேனும் மூன்றுநூல்கள் குறித்து கீழ்க்காணும் விவரங்களைத் திரட்டுக.

அ. நூலின் பெயர்
ஆ. நூல் ஆசிரியர் பெயர்
இ. நூல் வகை (கதை/கட்டுரை/கவிதை/ பாடல்... இன்னபிற).

மதிப்பீட்டுச் செயல்பாடு:

1. கவிஞர் தமிழ்ஒளி குறித்துப் பேசுக.

2. கவிஞர் பாரதிதாசன் பாடல்களுள் உனக்குப் பிடித்த ஒரு பாடலைப் பாடநூலில்இருந்து எடுத்தெழுதுக.


3. பின்வரும் கவிஞர் வாணிதாசனின் பாடலைப் படித்து அது குறித்த உங்கள் கருத்தைஒரு பத்தியில் எழுதுக.

"மழையே! மழையே! வா வா
வாழ்வின் உயிரே வா வா
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்
ஏரி குளங்கள் நிறைந்திடவும்
எருமை மாடு களித்திடவும்
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்
மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்
தெருவில் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்
காடு கரம்பு துளிர்த்திடவும்
காளை மாடு கொழுத்திடவும்
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயாது இசையை மீட்டிடவும்
தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்

குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும். ... "

Post a Comment

0 Comments