9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - பலவுள் தெரிக - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 - PALAVUL THERIKA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 3 , உள்ளத்தின் சீர்

மதிப்பீடு

பலவுள் தெரிக,

1 ) பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் - எருதுகட்டி

ஆ ) திருவாரூர் - கரிக்கையூர்

இ) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு

ஈ) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்

விடை : ஆ ) திருவாரூர் - கரிக்கையூர்

2 ) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : ஈ ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3 ) பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று -

அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை : இ ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

4 ) ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ) திசைச்சொற்கள்

ஆ ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்

ஈ) தொகைச்சொற்கள்

விடை : ஈ ) தொகைச்சொற்கள்

5 ) சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ). தழுவிப் பிடித்தல் என்கிறது

i) ஆ - அ - இ

ii ) ஆ - இ -  அ

iii ) இ - ஆ - அ

iv ) இ -  அ - ஆ

விடை : i ) ஆ - அ - இ 

Post a Comment

0 Comments