9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - வரவேற்பு மடல் எழுதுக / 9th TAMIL - EYAL 2 - VARAVERPU MADAL

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 ,உயிருக்கு வேர்

வரவேற்பு மடல் எழுதுக.


சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள்
பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

வரவேற்பு மடல்

அரசினர் மேல்நிலைப் பள்ளி , இளமனூர்.


10.11. 2021அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட
மாவட்டக் கல்வி அலுவலர்
திருமிகு அ.தமிழரசன்  அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

மாணவர் நலனில் அன்பு கொண்டவரே 

வருக! வருக! வணக்கம்.

           மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம்
பெற்றதாகத் தாங்கள் அறிவித்தது கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு
பெற்றமைக்குப் பெரிதும் உவகை கொள்கின்றோம்!

இயற்கையை நேசிக்கம் இனியவரே !

      பள்ளிகளின் சுற்றுப்புறத்தைப் பேணிக்காப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்! எங்கள் வகுப்பறையைப்  போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும்
எங்கள் வீடு போலவே நாள்தோறும் தூய்மையாய் வைத்திருக்கிறோம்.
நீங்கள் கூறிய வழிமுறைகளை நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பல ஆண்டுகளாக மாணவர்களுக்குப் போதிப்பதோடு, மரம் நட்டும் பராமரித்து வருகிறோம். நீங்கள் எங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.
நன்றி, வணக்கம்.

இளமனூர் , 
                                           தங்கள் அன்புள்ள,
10.11.2021
                                               விழாக்குழுவினர்.


Post a Comment

1 Comments