ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , உயிருக்கு வேர்
மதிப்பீடு - சிறுவினா
சிறுவினா
1 ) அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
* உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், நீர் மிகமிக அவசியம்.
* ' நீரின்றி அமையாது உலகு" எனத் திருவள்ளுவரும், “நீரின்று அமையா யாக்கை” எனக் குடபுலவியனாரும் நீரின் தேவையை அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.
* நீர்நிலைகளாகிய ஏரி, குளம், குட்டை, ஆறுகளைப் பாதுகாப்பது அவசியமாகிறது.
* பயிர்வாழ்க்கைக்கும், உயிர்வாழ்க்கைக்கும் நீர் பெருந்துணையாய் இருப்பதால், அதைப்
* பாதுகாக்கவும் பராமரிக்கவும் வழிகாட்ட வேண்டும்.
* நமது அடுத்த தலைமுறைக்கும் நீர் தேவை என்பதனால், நீர்நிலைகளை மாசுபடாமல் தூய்மை செய்தும், நீர் வரும் வழிகளில் ஏற்படும் தடைகளைக் களைந்தும் பாதுகாத்தும் மக்களிடம் நீரின் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வழிகாட்ட வேண்டும்.
**************** ************* ************
2 Comments
தனி
ReplyDeleteThank you
ReplyDelete