9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - நெடுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 . NEDUVINA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , உயிருக்கு வேர்

மதிப்பீடு

நெடுவினா

1. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

* தேன் நிறைந்த பூக்களைக் காவிரிநீர் மலையிலிருந்து அடித்துக்கொண்டு வருகிறது. தேன் உண்ணும் வண்டுகள், ஆரவாரம் செய்கின்றன. கால்வாய்களில் எங்கும் காவிரிநீர் ஓடுகிறது.

* வளர்ந்த நாற்றின் முதல்இலைச் சுருள் விரிந்தது கண்டு, உழவர்கள் களை பறிப்பர்.

* முத்துகளை ஈனும் சங்குகள் இடறியதால் உழத்தியர் இடைமெலிந்து, நடைதளர்ந்து அருகிலுள்ள வரப்பினை அடைவர். வயல்களில் கரும்பும், வாய்க்கால்களில் குவளைப் பூக்களும், வரப்புகளில் அன்னங்களும் காணப்படுகின்றன.

* நீர்நிலைகள் எல்லாம், கடலலைபோல் நீர்நிறைந்து காணப்படுகின்றன. அன்னங்கள் விளையாடும்   நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். வாளைமீன்கள் துள்ளி எழுந்து, பாக்குமரத்தில் பாயும். இக்காட்சியானது, வானத்தில் தோன்றும் வானவில்லைப் போல விளங்கும்.

* நெல்லின் சூடுகளைப் பெரிய போராகக் குவிப்பர். பிடித்த மீன்களையும், சங்குகள் நிறைந்த முத்துகளையும் குன்றைப்போலக் குவிப்பர். தேன் நிறைந்த பூக்களை மலைபோலக் குவிப்பர்.

* எருமைக் கூட்டங்கள் நெற்கதிர்மேல் வலமாகச் சுற்றிவருவது, மேகங்கள் பொன்மலையைச் சுற்றுவது போலக் காட்சி அளிக்கும். நாட்டில் தென்னை, அரசு, கடம்பு, பனை, சந்தன மரங்கள்,  எங்கும் செழித்து வளர்ந்துள்ளன. இவையே, பெரியபுராணம் காட்டும் திருநாட்டின் சிறப்புகளாகும்.

**************  ***************   ***********

2 ) நீரின்று அமையாது உலகு என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக் காட்டுடன் விவரி.

    * உலகில் வாழும் உயிரினங்கள் நீரில்லாமல் வாழ இயலாது. நீரே மனித வாழ்வின் அடித்தளம். மக்கள் உயிர்வாழப் பயன்படும் மழைநீர், அமிழ்தம் என உணரத்தக்கது. மழைநீர், மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான உணவை விளைவிக்கிறது; தானும் உணவாகிறது.

* மழைப்பொழிவு குன்றினால், உழவர் உழவுத் தொழிலைக் கைவிடுவர். மக்கள் உணவின்றிப் பசி பட்டினியால் மாள்வர். அவர்தம் ஒழுக்கமும் கெடும்.

* பெய்யாமல் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழை. பெய்துகாக்க வல்லதும் மழையே. வானத்திலிருந்து   மழைத்துளி வீழாவிட்டால், உலகில் பசும்புல்லையும் காண இயலாது.

* கடலும் தன் வளம் குன்றிப் போகும். நாட்டில் வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறாது. நாட்டில் தானமும் தவமும் இல்லாமல் போகும் என, நீரின் இன்றியமையாமையை, ‘வான்சிறப்பு'   என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ளார்.

****************   ***************  **********


Post a Comment

3 Comments