9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் - 2 , உயிருக்கு வேர் - மொழியோடு விளையாடு - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 , MOZHIYODU VILAIYAADU - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , உயிருக்கு வேர்

1. மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக.

எ - கா : ஆற்றங்கரையோரம் - ஆறு, கரை, ஓரம்

கடையெழுவள்ளல்கள் - கடை, ஏழு, வள்ளல்,

எடுப்பார்கைப்பிள்ளை -  எடு, பார், கை, பிள்ளை.

தமிழ்விடுதூது - தமிழ், விடு, தூது.

பாய்மரக்கப்பல் - பாய், மரம், கப்பல்.

எட்டுக்கால்பூச்சி - எட்டு, கால், பூச்சி.

அகராதியில் காண்க

கந்தி - மரகதம், கமுகு.

நெடில் - நெட்டெழுத்து, நீளம், மூங்கில்.

பாலி - அணை, ஆலமரம், செம்பருத்தி. 

மகி - பூமி, பசு.

கம்புள் - வானம்பாடி, சங்கு, கோழி.

 கைச்சாத்து - கையெழுத்து, இரசீது, பொருள் பட்டி.

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

எ - கா : அரிசி போடுகிறேன்

புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

1) மழை பெய்தது.

இடியுடன் மழை பெய்தது.

அதிகமான இடியுடன் மழை பெய்தது.

அளவுக்கு அதிகமான இடியுடன் மழை பெய்தது.

நேற்று, அளவுக்கு அதிகமான இடியுடன் மழை பெய்தது.

2 ) வானவில்லைப் பார்த்தேன்.

அழகான வானவில்லைப் பார்த்தேன்.

அந்தியில் அழகான வானவில்லைப் பார்த்தேன்.

மேற்கே அந்தியில் அழகான வானவில்லைப் பார்த்தேன்.

நான் மேற்கே அந்தியில் அழகான வானவில்லைப் பார்த்தேன்

3. குழந்தை சிரித்தது

பார்த்துக் குழந்தை சிரித்தது.

முகம் பார்த்துக் குழந்தை சிரித்தது.

தாயின் முகம் பார்த்துக் குழந்தை சிரித்தது.

வளர்ப்புத் தாயின் முகம் பார்த்துக் குழந்தை சிரித்தது.

4. எறும்புகள் போகின்றன.

வரிசையாக எறும்புகள் போகின்றன.

இரைதேடி வரிசையாக எறும்புகள் போகின்றன.

எப்போதும் இரைதேடி வரிசையாக எறும்புகள் போகின்றன.

5. படம் வரைந்தான்.

கண்ணன் படம் வரைந்தான்.

விளையாடும் கண்ணன் படம் வரைந்தான்.

தாயுடன் விளையாடும் கண்ணன் படம் வரைந்தான்.

ஆயர்பாடியில் தாயுடன் விளையாடும் கண்ணன் படம் வரைந்தான்.



Post a Comment

0 Comments