9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - மொழியை ஆள்வோம் - பாடப்பகுதி வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - MOZHIYAI AALVOM - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2 , உயிருக்கு வேர்

மொழியை ஆள்வோம்

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து  எழுதுக. (  புத்தகப் பக்கம் எண் - 58 )

1. Every flower is a soul blossming in nature. - Gernard De Nerval.

ஒவ்வொரு பூவும் இயற்கையில் மலரும் ஓர் ஆன்மாவாகும். - ஜெர்னார்டு டி. நெர்வல்

2. Sunset is still my favourite colour and rainbow is second - Mattie Stepanek

சூரிய மறைவு எனக்குப் பிடித்த நிறம். வானவில் இரண்டாவதுதான். - மாட்டி ஸ்டீபனேக்

3. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau

அதிகாலை நடைப்பயணம், அந்த நாள் முடிவதற்கான ஆசிர்வாதமாகும். - ஹென்றி டேவிட் தோரே

4. Just living is not enough One must have sunshine, freedom and a little flower - Hans Christian.

ஒருவருக்கு உயிர் வாழ்வது மட்டுமே போதாது; சூரிய ஒளி, சுதந்திரம் மற்றும் ஒரு சிறிய மலரும் வேண்டும். - ஹான்ஸ் கிறிஸ்டியன்

****************   ***********   *************

பிழை நீக்கி எழுதுக.

1. சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வபரம்அணையைக் கட்டியது.

விடை : சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வபரம்   அணையைக் கட்டினார்.

2. மதியழகன், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

விடை : மதியழகன், தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணைப் புரிகின்றன.

விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரக்காலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை   வைத்திருக்கிறோம்.

விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருந்தனர்.

5. சூறாவளியின்போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை : சூறாவளியின்போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால்   தப்பித்தான்.

***************    ************   ************

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

1 ) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல :

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாய்வதுபோல, நல்லவர்க்குக் கொடுத்த பொருள்,   தீயவர்களிடமும் சென்று சேர்கிறது.

2 ) தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் :

தண்ணீர் வெந்நீர் ஆனாலும், நெருப்பை அணைப்பதுபோலச் சான்றோர் கோபம் கொண்டாலும், நன்மை செய்யத் தவறமாட்டார்கள்.


3 ) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் :

மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் கரைப்பதுபோலக் கூனி, தன்னுடைய இனிய சொல்லால் கைகேயியின் மனத்தை மாற்றினாள்.

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது :

கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாததுபோலத் தமிழின் சிறப்பை ஆங்கில ஆதிக்கத்தால் அழிக்க இயலாது.

******************   ***********   ***********
வடிவ மாற்றம் தருக.

நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி
அமைக்க.

                பெருங்கடல் நீர், கதிரவனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, வாயு மண்டலத்தில் வெண்மேகங்களாகவும்,
கருமேகங்களாகவும் சூழ்ந்து பரவுகின்றன. குளிர்காற்றுப் பட்டவுடன், மேகங்கள் மழையாய்ப் பொழிகின்றன.
நிலத்தடி நீரானது மரம், செடி, கொடிகளின் வழி ஆவியாக மாறி, மேகமாகச் செல்கிறது. வளி மண்டலத்தில் உள்ளே நீராகிய மேகம் குளிர்ந்து, மழையாகப் பொழிகிறது. கதிரவனின் ஊடுருவல் இல்லாத குளிர்
மிகுந்த இடங்களில் உள்ள மழைநீர் உறைந்து, பனிப்பாறைகளாக மாறுகின்றன. 

              பனி உருகியும் மலைகளில்
பெய்கிற மழைநீரும் பள்ளம் நோக்கி ஓடிவருகிறது. ஆறாகப் பெருகி ஓடிவரும் நீர்நிலைகளில் நீர்த்தேக்கம்
அமைத்து நீரைத் தேக்கி வைத்துத் தேவையானபோது பயன் படுத்துகின்றனர். மழைநீர், எவ்விதத் தடையும் இல்லாததால் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடல் பெற்ற நீரே சூரிய வெப்பத்தில் ஆவியாகி மேகமாக மாறி, மீண்டும் மழையாகப் பொழிந்து கடலை அடைகிறது.



Post a Comment

0 Comments