9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - மதிப்பீடு - குறுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - KURUVINA - QUESTION & ANSWER ,

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , உயிருக்கு வேர்

மதிப்பீடு

குறுவினா

1 ) “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?

       “கூவல்” என்று அழைக்கப்படுவது, உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.

2 ) உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

ஏரி, கிணறு, குளம், கால்வாய்.

3 ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

     * உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவை உணவு.

*     எனவே, அந்த உணவைக் கொடுத்தோரே, உயிர் கொடுத்தோர் ஆவார்.

4 ) நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது ?

        அன்னங்கள் விளையாடும் அகன்ற துறை , எருமைகள் வீழ்ந்து மூழ்கும் நீர்நிலை , வாளை மீன் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாயும் மரச்சோலை ஆகியவற்றைப் பெரியபுராணம் , நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் காட்சிக்கு ஒப்பிடுகிறது.

5 ) மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

* ஒளிவீசும் தெளிந்த நீரைக் கொண்ட அகழியும்,

* பரந்த மணற்பாங்கான நிலமும்,

* உயர்ந்த மலையும்,

* குளிர்ந்த நிழல் தரும் காடும் நாட்டின் அரணாகும் எனக் குறள் கூறுகிறது.

*

Post a Comment

3 Comments