ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
அலகுத்தேர்வு ( இயல்கள் 1 , 2 , 3 )
காலம் : 1:30 மணி மதிப்பெண்கள் : 50
வினா உருவாக்கம்
திரு.மணிமீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை
பகுதி - 1 ( மதிப்பெண்கள் : 06 )
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ ) தொடர்நிலைச்செய்யுள்
ஆ ) புதுக்கவிதை
இ ) சிற்றிலக்கியம்
ஈ ) தனிப்பாடல்
2 ) மல்லல் மூதூர் வயவேந்தே - வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன ?
அ ) மறுமை ஆ ) பூவரசுமரம்
இ ) வளம் ஈ ) பெரிய
3 ) பொருந்தாத இணை எது ?
அ ) எருதுகோள் - எருதுகட்டி
ஆ ) திருவாரூர் - கரிக்கையூர்
இ ) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
ஈ ) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
4 ) தீரா இடும்பை தருவது எது ?
அ ) ஆராயாமை , ஐயப்படுதல்
ஆ ) குணம் , குற்றம்
இ ) பெருமை , சிறுமை
ஈ ) நாடாமை , பேணாமை
பாடலைப் படித்து விடை தருக.
" வசியும் வளனும் சுரக்க ! என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் "
5 ) இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ ) புறநானூறு ஆ ) மணிமேகலை
இ ) தமிழ்விடுதூது ஈ ) பெரியபுராணம்
6 ) வசியும் வளனும் - இலக்கணக்குறிப்பு
அ ) உம்மைத்தொகை ஆ ) பெயரெச்சம்
ஆ ) வினைத்தொகை ஈ ) எண்ணும்மை
பகுதி - 2 ( மதிப்பெண்கள் 12 )
பிரிவு - 1
குறுகிய விடை தருக. ( மூன்று மட்டும் )
( வினா எண் 10 , கட்டாய வினா )
7 ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.
8 ) விடைக்கேற்ற வினா அமைக்க.
அ ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.
ஆ ) திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
9 ) ஏறுதழுவுதல் குறித்த தொல்லியல்
சான்று கள் இரண்டு கூறுக.
10 ) ' விடல் ' என முடியும் குறளை எழுதுக.
பிரிவு - 2
விடை தருக ( மூன்று மட்டும் )
11 ) பழமொழிகளை நிறைவு செய்க.
அ ) இளமையில் கல்வி --------
ஆ ) கற்றோருக்குச் சென்ற ------
12 ) மரபு இணைச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ ) நகமும் சதையும்
ஆ கண்ணும் கருத்தும்
13 ) தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
அ ) Every flower is a soul blossoming in nature
ஆ ) The art of people is a true mirror to their minds.
14 ) பொருள் எழுதித் தொடர் அமைக்க.
வாழை - வாளை
பகுதி - 3 ( மதிப்பெண்கள் : 09 )
சுருக்கமான விடை தருக ( மூன்று மட்டும் )
( வினா எண் : 17 கட்டாய வினா )
15 ) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது ?
16 ) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை ?
17 ) ' காடெல்லாம் ' எனத்துவங்கும் பெரியபுராணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
18 ' படி ' என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு தொடர்கள் ( செய்தித்தொடர் , கட்டளைத்தொடர் , வினாத்தொடர் ) உருவாக்குக.
பகுதி - 4 ( மதிப்பெண்கள் : 15 )
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
19 ) உங்கள் நண்பர் பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணனின் ' கால் முளைத்த கதைகள் என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
20 ) நயம் பாராட்டுக.
கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
கவிமணி
21 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
22 ) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
பகுதி - 5 ( மதிப்பெண்கள் : 08 )
விரிவான விடை தருக.
23 ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் யாவை ?
அல்லது
அகழாய்வின் தேவை குறித்த உனது கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
***************** *********** *************
0 Comments