ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 7. அடுக்குத்தொடர் , இரட்டைக் கிளவி / 7th TAMIL - ACTIVITY 7 - QUESTION & ANSWER

 

ஏழாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 7 

அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியின்

இலக்கண நுட்பங்கள் அறிதல்

வினாக்களும் விடைகளும்

****************   ********** *************

கற்றல் விளைவு :

  மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு:

1. பாடல்

அடுக்குத் தொடர்கள்

கூட்டம் கூட்டமாகவே  

குருவி பறந்து சென்றிடும்.

குவியல் குவியலாகவே

கொட்டிக் கற்கள் கிடந்திடும்.

குலை குலையாய்த் திட்சைகள்

கொடியில் அழகாய்த் தொங்கிடும்.

மந்தை மந்தையாகவே

மாடு கூடி மேய்ந்திடும்.

சாரை சாரையாகவே

தரையில் எறும்பு ஊர்ந்திடும்

நேரில் தினமும் பார்க்கிறோம்

நீயும் நானும் தம்பியே!

                                       அழ. வள்ளியப்பா

            என்ற பாடலில் அமைந்துள்ள அடுக்குத்தொடர்களைப் பார்க்கலாம். இரண்டுசொல் அடுக்கிவரும்; ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே பொருள் இருக்கும்; அச்சம், வெகுளி, கோபம், விரைவு, அவலம் இவற்றைக் குறிக்கப் பயன்படும்.

(எ.கா.)

கூட்டம் கூட்டமாக, குவியல் குவியலாக, குலை குலையாக, மந்தை மந்தையாக,
சாரை சாரையாக - அடுக்குத்தொடர்கள்

(எ.கா.)

புலிபுலி என்று ஒருவன் கத்தினான் இத்தொடரில் புலி என்பதைத் தனித்து
நோக்கினால் அது ஒரு விலங்கின் பெயரை மட்டும் உணர்த்தும். ஆனால் புலிபுலி என்று கத்தும்போது அச்சப்பொருளோடு விரைவுப் பொருளையும் அது உணர்த்துகிறது.

2. மளமளவென்று வேகமாக வேலையை முடி- இத்தொடரில் மளமள என்ற சொல்
இடம்பெற்றுள்ளது. இதில் மள என்ற சொல் தனித்து நின்று பொருள் உணர்த்தாது; மளமள என்று இணைந்து விரைவுப் பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு இசை பற்றியும் குறிப்புப் பற்றியும் பண்பு பற்றியும் இரட்டித்து இணைந்து வந்து பொருள் தருவது இரட்டைக்கிளவி எனப்படும். இங்கு மளமள என்பது இரட்டைக்கிளவி
ஆகும்.

***************    ************   ***********

மதிப்பீட்டுச் செயல்பாடு:

            சலசலக்கும் நீரோடையில் பயந்து பயந்து மான் ஒன்று மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்து மசமசவென நிற்காமல் மடமடவென நீர் பருகியது. அங்கே பதுங்கிப் பதுங்கி வந்த புலி ஒன்று திகுதிகு எனத் தீப்பொறி தெறிக்கும் கண்களால் குறுகுறுவென மானைப்
பார்த்தது. தொலைவில் இருந்து இதனைக் கண்ட இருவர் வெலவெலத்துப் போய்க்
கால்கள் வெடவெடவென நடுநடுங்கப் 'புலி புலி' என கத்தவும் துணிவின்றிச்
செய்வதறியாது திருதிருவென விழித்தனர். அப்போது முதலைக்குட்டி மெதுவாய் நீந்திவர, புலியின் கவனம் சற்றே சிதறியது. அச்சமயம் மரக்கிளை சடசடவென முறிந்தது.


1. இப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி சொற்களை எடுத்து எழுதவும்.

அடுக்குத் தொடர்:

பயந்து பயந்து

பதுங்கிப் பதுங்கிப்

புலி புலி 

இரட்டைக் கிளவி :

சலசல 

மலங்க மலங்க

மசமச

மடமட

திருதிரு

குறு குறு

வெலவெல

வெடவெட

சடசட

2. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.

(சலசல, கலகல, மளமள)

* மிட்டாயைப் பார்த்ததும் குழந்தை கலகல  எனச் சிரித்தது.

* ஆற்றில் நீர் சலசல என ஓடியது.

* நேரமாகிவிட்டதால் சங்கவி மளமளவென வீட்டுப்பாடங்களை
என்று எழுதினாள்.

3. தொடர் அமைத்து எழுதுக.

அ. கொழுகொழு ஆ. நன்று நன்று

அ ) எங்கள் வீட்டு நாய்க்குட்டி கொழுகொழு வென இருக்கிறது.

ஆ ) எனது சேமிக்கும் பழக்கத்தைக் கேட்டு ஆசிரியர் நன்று நன்று எனப் பாராட்டினார்.

4. 'வெடவெடத்து பாம்பு பாம்பு' ஆகிய இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்
இரண்டையும் சேர்த்துப் பொருளுள்ள ஒரு தொடராக எழுதுக.

பாம்பைக் கண்டதும் ' பாம்பு பாம்பு ' என அலறியடித்து ஓட உடம்பு ' வெடவெடத்துப் ' போனது.

*****************   ************   ***********

Post a Comment

0 Comments