பத்தாம் வகுப்பு - தமிழ்
கவிதைப்பேழை
இயல் 7 - மெய்க்கீர்த்தி & சிலப்பதிகாரம்
வினாக்களும் விடைகளும்
1) கோப்பரகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்கள் பெற்ற சோழன் ------
அ) இரண்டாம் இராசராச சோழன்
ஆ) பராந்தகச்சோழன்
இ) கோப்பெருஞ்சோழன்
ஈ) மனுநீதிச்சோழன்
விடை : அ ) இரண்டாம் இராசராச சோழன்
2) மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டு ----- ஆல் கல்லில் பொறிக்கப்பட்டவை.
அ) மன்னர்களால்
ஆ) அமைச்சர்களால்
இ) கல்தச்சர்களால்
ஈ) குருமார்களால்
விடை : இ ) கல்தச்சர்களால்
3) ----- காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
அ ) முதலாம் இராசராச சோழன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) முதலாம் குலோத்துங்கன்
ஈ) கரிகாற்சோழன்
விடை : அ ) முதலாம் இராசராசன்
4) இராசராசன் ஆட்சியில் , நாட்டில் பிணிக்கப்படுவன -----
அ) மக்கள்
ஆ) பறவைகள்
இ) யானை
ஈ) பூனை
விடை : இ ) யானை
5) இராசராசன் ஆட்சியில் கலக்கமடைவன ------
அ) ஓடைகள்
ஆ) ஆறுகள்
இ) கடல்
ஈ) குளங்கள்
விடை : அ ) ஓடைகள்
6) இராசராசன் ஆட்சியில் -------
மட்டுமே வடுப்படுகின்றன.
அ) மக்கள்
ஆ) மாங்காய்கள்
இ) தேங்காய்கள்
ஈ) விலங்குகள்
விடை : ஆ ) மாங்காய்கள்
7) ' தன்நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' - என்னும் மெய்க்கீர்த்தித் தொடர்
உணர்த்தும் பொருள் -----
அ) மேம்பட்ட நிருவாகத்திறன்
பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம்
கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல்
காப்பவர்
விடை : ஈ ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
8) மாமலரே கடியவாயின - இதில் ' மாமலர்' என்பதன் இலக்கணக்குறிப்பு -----
அ) உருவகம்
ஆ) உவமைத்தொகை
இ) உரிச்சொல் தொடர்
ஈ) பண்புத்தொகை
விடை : இ ) உரிச்சொல் தொடர்
9) மெய்க்கீர்த்தி -இதில் ' கீர்த்தி
என்ற சொல்லின் பொருள் -----
அ) அழகு
ஆ) பெருமை
இ) புகழ்
ஈ) செல்வம்
விடை : இ ) புகழ்
10) சிலப்பதிகாரத்தை.இயற்றியவர் -----
அ) கவுந்தியடிகள்
ஆ) இளங்கோவடிகள்
இ) மறைமலையடிகள்
ஈ) இராமலிங்க அடிகள்
விடை : ஆ ) இளங்கோவடிகள்
11) சிலப்பதிகாரத்தில் உள்ள
காண்டங்களின் எண்ணிக்கை ------
அ ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை : ஆ ) மூன்று
12) இரட்டைக் காப்பியங்கள் என
அழைக்கப்படுபவை சிலப்பதிகாரமும் ---- ஆகும்.
அ) சீவக சிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
விடை : ஆ ) மணிமேகலை
13) இளங்கோவடிகளிடம் , ' அடிகள் நீரே அருளுக ' என்று கூறியவர் ------
அ) கம்பர்
ஆ) ஓட்டக்கூத்தர்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
விடை : ஈ ) சீத்தலைச்சாத்தனார்
14) சிலப்பதிகாரத்தில் , ' இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்துள்ள காண்டம் -----
அ) வஞ்சிக்காண்டம்
ஆ) புகார்க்காண்டம்
இ) மதுரைக்காண்டம்
ஈ) விலாதத்துக்காண்டம்
விடை : ஆ ) புகார்க்காண்டம்
15 ) இளங்கோவடிகள் -------- மரபைச் சேர்ந்தவர்
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
விடை : அ ) சேர
16) " நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் " - என்று பாடியவர் -
அ) திருவள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
விடை : இ ) பாரதியார்
17 ) சிலப்பதிகாரம் கூறும் வணிக
நகரம் -----
அ) பூம்புகார்
ஆ) மருவூர்ப்பாக்கம்
இ) பட்டினப்பாக்கம்
ஈ) கீழ்ப்பாக்கம்
விடை : ஆ ) மருவூர்ப்பாக்கம்
18) ' ஓசுநர்' என்பதன் பொருள் -----
அ ) அப்பம் சுடுவோர்
ஆ) கள் விற்போர்
இ ) எண்ணெய் விற்போர்
ஈ) ஓவியர்
விடை : இ ) எண்ணெய் விற்போர்
19 ) ' துகிர்' என்பதன் பொருள் -----
அ ) முத்து
ஆ) பவளம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை : ஆ) பவளம்
20) வண்ணமும் சுண்ணமும் -
இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உம்மைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) எண்ணும்மை
விடை : எண்ணும்மை
**************** ************** ***********
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை.
கருத்துகளைப் பகிர - 97861 41410
*************** ************** ******
2 Comments
Very good
ReplyDeleteNah man it's not good
Delete