பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 . சிற்றகல் ஒளி - வினா & விடை / 10th TAMIL - EYAL - 7 , CHITRAKAL OLI - ONLINE TEST

 

பத்தாம் வகுப்பு -  தமிழ் -இயல் 7

சிற்றகல் ஒளி -

வினா விடை

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்'
மு.மகேந்திர பாபு, 

தமிழாசிரியர் , மதுரை .


80% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
வரவில்லையெனில் 97861 41410 என்ற
எண்ணை வாட்சாப்பில் தொடர்பு கொண்டு பெயர் , வகுப்பு , மாவட்டம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்.

************   *************    **************

1) ம.பொ.சி. - விரிவாக்கம் -----

அ) மயிலாப்பூர் பொன்னுசாமி

சிவஞானம்

ஆ) மதுரை பொன்னையா சிவஞானி

இ) மன்னார்குடி பொன்னன் சிவசாமி

ஈ) மயிலாடுதுறை பொன்னுசாமி

சிவஞானம்

விடை :  அ ) மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

2) இந்திய விடுதலைப் போராட்ட   வரலாற்றில் சிறப்புடைய ஆண்டு

அ) 1900

ஆ) 1904

இ) 1906

ஈ) 1910

விடை : இ ) 1906 


3) ஆங்கிலேயர்களுக்கு
எதிராகச் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் -----

அ) ம.பொ.சி.

ஆ) வ.உ.சி.

இ )  உ.வே.சா.

ஈ) வ.வே.சு.

விடை : ஆ ) வ.உ.சி

4) ' சிற்றகல் ஒளி' பாடப்பகுதியானது ----

அ ) செய்யுள்

ஆ) கதைப்பாடல்

இ) நாடகம்

ஈ) தன்வரலாறு

விடை : ஈ ) தன்வரலாறு

5) தமிழினத்தை ஒன்று படுத்தும்   இலக்கியமாக ம.பொ.சி.கருதியது

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) கம்பராமாயணம்

ஈ) சிலப்பதிகாரம்

விடை : ஈ ) சிலப்பதிகாரம்

6) ' மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு   வேண்டும்' - மாலவன் குன்றமும்   வேலவன் குன்றமும் குறிப்பவை   முறையே ------

அ ) திருப்பதியும் திருத்தணியும்

ஆ) திருத்தணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்

ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை : அ ) திருப்பதியும் திருத்தணியும்

7) ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி மற்றொன்று ----- ம.பொ.சி.என்றார்

அ) புகழ்

ஆ) கேள்வி

இ) வேள்வி

ஈ) இணையதளம்

விடை :ஆ ) கேள்வி 

8) உணவுக்காக வைத்திருக்கும்   பணத்தில் - வாங்கி, பட்டினி   கிடந்திருக்கிறேன் என்றார் ம.பொ.சி.

அ) புத்தாடை

ஆ) கடிகாரம்

இ) புத்தகம்

ஈ) விளக்கு

விடை : இ ) புத்தகம்

9) குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர்

அ) மார்ஷல் நேசமணி

ஆ) மார்ஷல் கண்மணி

இ) மார்ஷல் பொன்னுமணி

ஈ) மார்ஷல் மணி

விடை : அ ) மார்ஷல் நேசமணி

10 ) ம.பொ.சி என்று ------     போற்றப்படுகிறார்

அ) அருட்கவிச்செல்வர்

ஆ) சிலம்புச்செல்வர்

இ) சிந்தனைச்செல்வர்

 ஈ) கவிக்கோ

விடை : ஆ ) சிலம்புச்செல்வர்

11) புறநானூற்றிலும் -------  லும்
தமிழகத்தின் வடக்கெல்லை
வேங்கடமலையாகவும் , தெற்கெல்லை
குமரிமுனையாகவும் கூறப்படுகிறது.

அ ) திருக்குறளிலும்

ஆ) சிலப்பதிகாரத்திலும்

இ) மணிமேகலையிலும்

ஈ) இராமாயணத்திலும்

விடை : ஆ ) சிலப்பதிகாரத்திலும்

12) சாகித்திய அகாதமி விருது
பெற்ற ம.பொ.சி. அவர்களின்
நூல் ------

அ ) சிலப்பதிகாரத் திறனாய்வு

ஆ) இலக்கியத்தின் எதிரிகள்

இ) தமிழன்குரல்

ஈ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

விடை : ஈ ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

13) சேர நாட்டின் துறைமுகம்

அ ) கொற்கை

ஆ) முசிறி

இ) சென்னை

 ஈ) கொச்சி

விடை : ஆ ) முசிறி

14) வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச்செய்த தமிழாசிரியர் -----

அ ) மங்கலக்கிழார்

ஆ) கோவூர்கிழார்

இ) அரிசில்கிழார்

ஈ) நல்லூர்க்கிழார்

விடை : அ ) மங்கலக்கிழார்

15) சர்தார் கே.எம்.பணிக்கர்   தலைமையில் மத்திய அரசால் அமைக்கப் பட்ட ஆணையம்

அ) கதர் ஆணையம்

ஆ) மக்கள்நல ஆணையம்

இ) மொழிவாரி ஆணையம்

ஈ) இனவாரி ஆணையம்

விடை : இ ) மொழிவாரி ஆணையம்

16) தலையைக் கொடுத்தேனும்   தலைநகரைக் காப்போம் என முழங்கியவர் -----

அ) காமராசர்

ஆ) ம.பொ.சி.

இ) இராஜாஜி

ஈ) அண்ணா

விடை : ஆ ) ம.பொ.சி.

17) ஒரு பொருளாக மதிக்கத்
தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது ------

அ ) கல்வி

ஆ) வீரம்

இ) செல்வம்

ஈ) புகழ்

விடை : இ ) செல்வம்

18) மக்களே போல்வர் கயவர் ;,அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் - இக்குறட்பாவில்
அணி உள்ளது.

அ) உவமையணி

ஆ) வஞ்சப்புகழ்ச்சி அணி

இ) சொற்பொருள்
 பின்வருநிலையணி

ஈ ) உருவக அணி

விடை : அ ) உவமையணி

19 ) ஒருவருக்கு வறுமையைப்
போன்று துன்பம் தருவது -----

அ ) நோய்

ஆ) தீ

இ) பகைவர்

ஈ) வறுமை

விடை : ஈ ) வறுமை 

20 ) சொல்லப் பயன்படுவர் ------

அ ) மூத்தோர்

ஆ) பெற்றோர்

இ) ஆசிரியர்

ஈ) சான்றோர்

விடை : சான்றோர் 

**************    ***************   *************

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.

Post a Comment

0 Comments