பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - திருக்குறள் - குடிசெயல்வகை , நல்குரவு / 10th TAMIL - THIRUKKURAL - KUDISEYAL VAKAI & NALKURAVU

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 6 , வாழ்வியல் இலக்கியம் 

திருக்குறள் - குடிசெயல் வகை ( 103 ) 

நல்குரவு ( 105 ) 


***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் வாழ்வியல் இலக்கியம் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள திருக்குறள் ' ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.




குடிசெயல் வகை ( 103 )

13. ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

பொருள்: 

விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

14. குற்றம் இலனாய்க் குடிசெய்து
வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.*

பொருள்: 

                     குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.

**************     ***************    **********

நல்குரவு (105)

15. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.'

பொருள்: 

            ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையே ஆகும்.

அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி

*****************   ******* ******************

Post a Comment

0 Comments