பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - திருக்குறள் - கயமை / 10th TAMIL - THIRUKKURAL - KAYAMAI

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 6 , வாழ்வியல் இலக்கியம் 

திருக்குறள் - கயமை ( 108 ) 


***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் வாழ்வியல் இலக்கியம் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள திருக்குறள் ' ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.




கயமை (108)

18. மக்களே போல்வர் கயவர்: அவரன்ன'
ஒப்பாரி யாம்கண்ட தில்,

பொருள்: 

        கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற
ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை.

அணி: உவமையணி

19. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.

பொருள்: தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.

அணி: வஞ்சப் புகழ்ச்சி அணி

20. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்.

பொருள்: 

      ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவிசெய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.

அணி: உவமை அணி

****************  ************   ************

Post a Comment

0 Comments