பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் - அமைச்சு / 10th TAMIL - THIRUKKURAL - 64 - AMAICCHU

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 6 , வாழ்வியல் இலக்கியம் 

திருக்குறள் - அமைச்சு ( 64 ) 

***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் வாழ்வியல் இலக்கியம் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' திருக்குறள் ' ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
திருக்குறளுக்கான அற்புதமான விளக்கத்தைக் கண்டோம். இனி குறட்பாக்களைக் காண்போம்.

அமைச்சு ( 64 ) என்னும் அதிகாரத்தில் 4 குறட்பாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறட்பாக்களையும் அதற்கான பொருளையும் காண்போம்.


1. கருவியும் காலமும் செய்கையும்                                                                                      செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.

பொருள்: 

        தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

பொருள்: 

              மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

3. மதிநுட்பம், நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

பொருள்: 

            இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).

4. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல். *

( மனப்பாடக் குறட்பா )

பொருள்:

          ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

***************   *************   ***********

Post a Comment

0 Comments