பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 4 , நான்காம் தமிழ்
திறன் அறிவோம் - பலவுள் தெரிக
திறன் அறிவோம்
பலவுள் தெரிக,
1. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
விடை : ஆ ) இறைவனிடம் குலசேகராழ்வார்
2, தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குத் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடை : இ ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப் பட்டுள்ளன
3 ) பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
விடை : ஈ ) வானத்தையும் பேரொலியும்
4. குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள
வழுவமைதி முறையே -
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இடவழுவமைதி
விடை : இ ) பால் வழுவமைதி , திணை வழுவமைதி
5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா
ஆ) சீலா
இ) குலா
ஈ) இலா
விடை : ஈ ) இலா
*************** *************** **********
0 Comments