பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 4 , நான்காம் தமிழ்
சிறுவினா
1. 'மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
"மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தி :
(i) “மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
(ii) அதுபோன்று, வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! “நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்” என்று குலசேகராழ்வார். தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார்.
2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனைமேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
இன்றைய அறிவியல்கண்டுபிடிப்புகள் மனிதனைமேம்படுத்துகின்றன. அன்றாடம்நம்செயல்பாடுகளில்அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. மனிதனின் அன்றாடத் தேவையான நீர், உணவு, உடை எல்லாவற்றிலும் அறிவியலின் வளர்ச்சி பயன்படுகிறது. நாம் பயன்படுத்தும் நீர் குளிர்நீர், வெந்நீர் என இருவகையில் உள்ளது. அவை குறையுடையவையாயின் அவற்றைச் செப்பம் செய்யும் முறைகளுக்கு விஞ்ஞானம் தேவைப்படுகிறது.
நாம் உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக உள்ளதா கலப்பின்றி உள்ளதா வயதுக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் பொருந்துவதாக உள்ளதா என அறிவதற்கு அறிவியல் சாதனங்கள் தேவைப்படுகின்றன.
விடியலில் எழுந்ததது முதல் இரவு தூங்கும் வரை நாம் அறிவியலால் உருவான மின்சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். அறுவைசிகிச்சை வரை எல்லாவற்றிற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் எங்கும் நிறைந்த இறைவனைப் போல் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிறைந்து மனிதனை மேம்படுத்துகின்றன.
3. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள்.மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.
எதிர்காலத் தொழில்நுட்பம் :
மனிதர்களுக்கு மூளையைப் போன்றது. செயற்கை நுண்ணறிவுகொண்ட கணினிக்கு மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.
மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் உடல்நலத்தைப் பேணவும் கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறியவும் மருத்துவம் செய்யும் முறைகளைப் பட்டறிவு மிக்க மருத்துவரைப் போலப் பரிந்துரை செய்யவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
1 Comments
Hii
ReplyDelete