பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - பெருமாள் திருமொழி & இலக்கணம் - பொது - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 10th TAMIL - EYAL - 4 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4 , பெருமாள் திருமொழி & 

இலக்கணம் - பொது 

இயங்கலைத்தேர்வு 

வினாக்களும் விடைகளும்

**************   **************   *************

1) பெருமாளை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள் ----- என்று அழைக்கப்படுகிறார்கள்.

அ) வைணவர்கள்

ஆ) சைவர்கள்

இ) சமணர்கள்

ஈ) பௌத்தர்கள்

விடை : அ ) வைணவர்கள்

2) ஆழ்வார்கள் மொத்தம் ----- பேர்.

அ) 63

ஆ) 52

இ) 12

ஈ) 8

விடை : இ ) 12 

3) பெருமாள் திருமொழியைப் பாடிய
ஆழ்வார் ------

அ) பெரியாழ்வார்

ஆ) திருமழிசையாழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) குலசேகராழ்வார்

விடை : ஈ ) குலசேகராழ்வார் 

4 ) தமிழர் , பண்டைய நாட்களில்
இருந்தே ----- ஐ வாழ்வியலோடு
இணைத்துக் காணும்
இயல்படையவர்களாக இருக்கிறார்கள்.

அ) அறிவியலை

ஆ) வானியலை

இ ) ஜோதிடத்தை 

ஈ ) கணிதத்தை

விடை : அ ) அறிவியலை


5) வித்துவக்கோடு என்னும் ஊர் ------
மாநிலத்தில் உள்ளது.

அ ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திரா

ஈ) கர்நாடகா

விடை : ஆ ) கேரளா 

6) நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ----- திருமொழியாக உள்ளது.

அ)இரண்டாம்

ஆ) நான்காம்

இ) ஐந்தாம்

ஈ) ஆறாம்

விடை : இ ) ஐந்தாம்

7) பெருமாள் திருமொழியில் உள்ள
பாடல்களின் எண்ணிக்கை ------

அ) 55

ஆ) 95

இ) 105

ஈ) 150

விடை : இ ) 105

8) வித்துவக்கோட்டில் உள்ள இறைவனின் பெயர் -----

அ) கூடலழகப் பெருமாள்

ஆ) நரசிங்கப் பெருமாள்

இ) உய்யவந்த பெருமாள்

ஈ) மாயவப்பெருமாள்

விடை : இ ) உய்யவந்த பெருமாள்

9) திணை  -------   வகைப்படும்

அ ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

 ஈ) ஐந்து

விடை : அ ) இரண்டு 

10 ) பால் என்பது  ------ ன் உட்பிரிவு ஆகும்

அ) திணையின்

ஆ) இடத்தின்

இ) வழுநிலையின்

ஈ ) வினையின்

விடை : அ ) திணையின் 

11) நான், யான், நாம் , யாம் என்பன --------
பெயர்கள்

அ) தன்மைப்

ஆ) முன்னிலைப்

இ) படர்க்கைப்

ஈ) பண்புப்

விடை : அ ) தன்மைப் 

12) இலக்கண முறையுடன் பிழையின்றிப்
பேசுவதும் , எழுதுவதும் ----- நிலை
எனப்படும்.

அ) வழு

ஆ) வழா

இ) இயல்பு

ஈ) திருந்திய

விடை : ஆ) வழா 

13 ) செழியன் வந்தது - இதில் உள்ள வழு -----

அ) கால வழு

ஆ) இட வழு

மரபு வழு

ஈ) திணை வழு

விடை : ஈ ) திணை 

14) நேற்று வருவான் - இத்தொடரில் உள்ள வழு -----

அ) திணை வழு

ஆ) பால் வழு

இ ) கால வழு

ஈ) விடை வழு

விடை : இ ) கால வழு 

15 ) கண்ணகி உண்டான் - இதில் உள்ள வழு -----

அ) திணை வழு

ஆ) பால் வழு

இ) மரபு வழு

ஈ) வினா வழு

விடை : ஆ ) பால் வழு 

16) " என் அம்மை வந்தாள் " என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ----- வழுவமைதி 

அ) இடவழுவமைதி

ஆ) கால வழுவமைதி

இ) பால் வழுவமைதி

ஈ ) திணைவழுவமைதி

விடை : ஈ ) திணை வழுவமைதி

17) பால்  ------- வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

விடை : இ ) ஐந்து 

18) "கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற்படவேணும் " - என்று பாடியவர்

அ) திருவள்ளுவர்

ஆ) பாரதியார்

இ) ஒளவையார்

ஈ) பாரதிதாசன்

விடை : ஆ) பாரதியார்

19) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம்
வருகிறார் - இத்தொடரில் ----- வழுவமைதி
வந்துள்ளது.

அ) திணை வழுவமைதி

ஆ) பால் வழுவமைதி

இ) கால வழுவமைதி

ஈ) இடவழுவமைதி

விடை : இ ) கால  வழுவமைதி

20) தென்னை மரங்கள் உள்ள பகுதியை
தென்னந்தோட்டம் என்று கூறுவது ----- வழு

அ) இட வழு

ஆ) மரபு வழு

இ) வினா வழு

ஈ) திணை வழு

விடை : ஆ ) மரபு வழு 

***************    **************    ***********

வினா உருவாக்கம்

பைந்தமிழ் - மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் ,மதுரை - 97861 41410

*****************   *************  ************

Post a Comment

0 Comments