பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - நயம் பாராட்டுக / 10th TAMIL - EYAL 4 - NAYAM PAARATTUKA

 


பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் 4

நயம் பாராட்டுக

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெளிபடைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?

                                             - பாரதியார்

திரண்ட கருத்து :

வானத்தில் உலவுகின்ற நிலவையும், விண்மீன்களையும் காற்றையும் அழகுபட அமைத்து அதில் குலாவும் அமுதத்தைக் குடித்து அழகாக்கினோம். எங்கும் உலவுகின்ற மனமாகிய சிறு பறவையை எவ்விடத்திலும் ஓடச் செய்து மனம் மகிழ்ந்தோம். பலாக்கனியின் சுளைகள் அடங்கிய வண்டியில் ஒரு வண்டு பாடுவது வியப்பல்ல. தேன் உள்ள இடமெங்கும் வண்டுகள் செல்லும் அதுபோல அழகுள்ள இடங்களில் மனம் செல்கின்றது.

மையக் கருத்து :

மனமானது சிறு பறவையைப் போன்று அழகுள்ளவற்றை எல்லாம் கண்டு மகிழும் என்று பாரதியார் கூறுகின்றார்.

மோனைத்தொடை : 

நிலாவையும் - நேர்ப்பட

குலாவும்        - கோல

பலாவின்       - பாடுவதும்

எதுகைத்தொடை 

நிலாவையும்   -  குலாவும்

உலாவும்           - பலாவின் 

இயைபுத்தொடை 

வெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம்



Post a Comment

0 Comments