பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , நான்காம் தமிழ் - பாடப்பகுதி குறுவினா / 10th TAMIL - EYAL 4 - KURUVINA - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4 , நான்காம் தமிழ்

குறுவினா

1 ) வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல்   கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக. எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல்   கண்டுபிடிப்புகள்:

i ) செயற்கை நுண்ணறிவால் நோய்களைக் கண்டறியும் ஆராய்ச்சி

(ii) செயற்கை நுண்ணறிவால் வயதானவர்களுக்கு உதவும் ரோபோக்களைக் கண்டறிதல்

2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

(i) இத்தொடரில் வருகின்ற, செல்கிறேன் என்பன நிகழ்காலத்தைக் குறிக்கும் சொற்கள்.

(ii) 'வரவிருக்கின்ற', 'செல்லவிருக்கிறேன்' என்று எதிர்காலத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக 'வருகின்ற ' செல்கின்ற' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கால வழுவமைத்திக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

(i) மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அம்மருத்துவரை நேசிக்கின்றார். அத்துடன் அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

(ii) இங்கு மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.


4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக்
குறிப்பிடுக.

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் கூறுவன :

காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம்.
நெருப்புப் பந்துபோல் உருவான புவி
பூமி குளிரும்படியாகப் பொழியும் மழை

5. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க
மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்து குரைப்பானே தவிர கடிக்க
மாட்டான்.

Post a Comment

0 Comments