ஆறாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
3 . உரைநடைப் பகுதியில் இலக்கணக்
கூறுகளைக் கண்டறிதல்
கற்றல் விளைவு :
மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு
அறிமுகம் :
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் பற்றி அறிதல்.
எழுவாய் :
ஒரு தொடரில் யார், எவர்,எது,எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவதே எழுவாய் ஆகும்.
எடுத்துக்காட்டு : கமலா கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றாள்.
"கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?" என்ற வினாவுக்கு விடையாக வரும் கமலா, என்னும் சொல்லே எழுவாய் ஆகும்.
எழுவாய்
எது?
எவர்?
யார்?
எவை?
பயனிலை :
ஒரு தொடரை முழுமை பெறச்செய்யும் சொல்லே பயனிலை ஆகும். எடுத்துக்காட்டு : இளமாறன் தோட்டத்திற்குச் சென்றான்.
'சென்றான்' என்ற சொல்லே இத்தொடரை முழுமையடையச் செய்யும் சொல்லாகும். எனவே, இத்தொடரில் 'சென்றான்' என்பது பயனிலை ஆகும்.
செயப்படுபொருள் :
ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை, எங்கு என்னும் வினாக்களுக்கு
விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும்.
எடுத்துக்காட்டு : பறவைகள் வானில் பறந்தன.
"பறவைகள் எங்குப் பறந்தன?" என்ற வினாவுக்கு விடையாக வருவது "வானில்" என்ற சொல்லே ஆகும். எனவே, 'வானில்' என்பதே செயப்படுபொருள் ஆகும்.
விளக்கம் 1:
ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவர்தம் கைகளில் ஓர் அழைப்பிதழ் இருந்தது, அது என்னவாக இருக்கும்? என்ற ஆவல் மாணவர்களின் முகத்தில் பளிச்சிட்டது.
ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார்.
ஆசிரியர் - எழுவாய்
வகுப்பினுள் - செயப்படுபொருள்
நுழைந்தார் - பயனிலை
விளக்கம் 2:
அழகாபுரி மன்னர் சிறந்த முறையில் ஆட்சிசெய்துவந்தார். அவரது நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மன்னரின் புகழ் அண்டை நாடுகளுக்கும் பரவியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்
மக்கள் - எழுவாய்
மகிழ்ச்சியாக - செயப்படுபொருள்
வாழ்ந்தார்கள் - பயனிலை
மதிப்பீட்டுச் செயல்பாடு:
அ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்தெழுதுக.
1. மீனாட்சி நடனம் ஆடினாள்,
2. எடிசன் மின்விளக்கினை உருவாக்கினார்.
3. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.
4. நளாயினி பாடம் நடத்தினாள்.
5. நான் மருத்துவரிடம் சென்றேன்.
6. மழையினால் பூமி குளிர்ந்தது.
ஆ) அடிக்கோடிட்ட தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து
எழுதுக.
விஜயநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளைக் கொண்ட தொடர்களை உருவாக்குக.
0 Comments