ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2 ,சொற்றொடர் அமைப்பு முறை அறிதல் / 7th TAMIL - ACTIVITY 2 - QUESTION & ANSWER

 

ஏழாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடுகள் & வினா - விடை 2. சொற்றொடர் அமைப்பு முறை அறிதல்

கற்றல் விளைவு :

மொழியின் இலக்கணக்கூறுகளைப் புரிந்துகொண்டு அவற்றைத்தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு:

சொற்கள் தொடர்ந்து வருவதைத் தொடர் என்பர். தொடரில் உள்ள கூறுகளான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை இப்பாடலின்வழி அறியலாமா?

இலக்கணப் பாடல்

எழுவாய் பயனிலை செயப்படு பொருள்,

இணைந்தது சொற்றொடர் தானே!

எழுவாய் என்பது பெயர்ச்சொல்லே,

அதுவே சொல்லின் முதற்சொல்லே!

பயனிலை என்பது வினைமுற்றே,

அதுவே சொல்லின் கடைச்சொல்லே!

செயப்படு பொருள் என்பது வினாவின் விடையே,

அதுவே சொல்லின் நடுச்சொல்லே!

எழுவாய் செயப்படு பொருளும் தொடரில்

இல்லாமல் வருமே;

பயனிலை இருந்தால்தான் தொடரில்

பொருள் வருமே.


விளக்கம்:

   * ஒரு தொடரில் யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் எனப்படும். எழுவாய் எப்போதும் பெயர்ச் சொல்லாகவே இருக்கும். (எ.கா.) தென்றல் ஓவியம் வரைந்தாள்.

* ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும். (எ.கா.) தென்றல் ஓவியம் வரைந்தாள்.

* ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம். (எ.கா.)

தென்றல் ஓவியம் வரைந்தாள்.

* சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இடம்பெறும்

(எ.கா.) கந்தன் பாடம் படித்தான்.

* எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமையலாம்.(எ.கா.) 

1. பாடம் படித்தான் 2. கந்தன் படித்தான்.
மாணவர் செயல்பாடு: வண்ண மையினால் அடிக்கோடிடுக.
(எழுவாய் - சிவப்பு; பயனிலை - பச்சை; செயப்படுபொருள் - மஞ்சள்)

1. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

2. பூவழகி வீணையை மீட்டினாள்.

முருகன் உணவு உண்டான்.

4. வளவன் உண்டு உறங்கினான்.

குரங்கு மரத்தில் ஏறியது.

***************   *************   ************

மதிப்பீட்டுச் செயல்பாடு:

பத்தியைப் படித்து அதில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
சொற்களைக் கட்டங்களில் எடுத்து எழுதுக

கோபால் காலையில் எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். நண்பர்களுடன்
பள்ளிக்குச் சென்றான். வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடினான். ஆசிரியர் நடத்திய பாடத்தைக் கவனித்தான். ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடையைக் கூறினான்.
மதிய உணவு உண்டான். மாலை வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு வந்தான். சிறிதுநேரம் தன் நண்பர்களுடன் விளையாடினான். வீட்டுப்பாடங்களைச் செய்துமுடித்தான். இரவு உணவு
உண்ட பின் உறங்கினான்

எழுவாய் - கோபால் , நண்பர்கள் , தோழர்கள் , ஆசிரியர் .

பயனிலை - எழுந்தான் , முடித்தான் , கவனித்தான் , வந்தான்.

செயப்படுபொருள் - காலை , பள்ளி , பாடம்

**************   *************   ************

Post a Comment

0 Comments