பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - தொகைநிலைத்தொடர்கள் - ஆன்லைன்தேர்வு - வினா & விடை / 10th TAMIL - EYAL 2 - THOKAINILAITH THODARKAL - ONLINE TEST - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2 , கற்கண்டு 

தொகைநிலைத் தொடர்கள்

வினாடி வினா & இயங்கலைத்தேர்வு

வினாக்களும் விடைகளும்

*************   **************   *************

வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு,

 தமிழாசிரியர் , மதுரை -

97861 41410

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.

*****************   *************  ************


1) சொற்கள் பல தொடர்ந்துநின்று பொருள் தருவது -----

அ) சொல்

ஆ) சொற்றொடர்

இ) வார்த்தைகள்

ஈ) பத்தி

விடை : ஆ) சொற்றொடர்

2) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒருசொல் போல் நின்று வேற்றுமை உருபு மறைந்து வரும் தொடர் ------

அ) தொகைநிலைத் தொடர்

ஆ) தொகா நிலைத்தொடர்

கலவைத்தொடர்

ஈ) பெயரெச்சத்தொடர்

விடை : அ) தொகைநிலைத் தொடர்

3) தொகைதிலைத் தொடரின்
வகைகள்

அ ) இரண்டு

ஆ) நான்கு

இ )  ஆறு

ஈ) பத்து

விடை : இ )  ஆறு

4) ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது ----- தொகை எனப்படும்.

அ ) வினைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) வேற்றுமைத்தொகை

விடை : ஈ) வேற்றுமைத்தொகை

5) மதுரை சென்றார் - இத்தொடரில் மறைந்து வந்துள்ள வேற்றுமை  உருபு

அ) ஐ

ஆ) ஆல்

இ ) கு

ஈ) இன்

விடை : இ ) கு

6) ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது

அ) பண்புத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ ) வினைத்தொகை

ஈ) உருபும் பயனும் உடன் தொக்க
தொகை

விடை : ஈ) உருபும் பயனும் உடன் தொக்க
தொகை

7) தமிழ்த்தொண்டு ------ என  விரிந்து பொருளை உணர்த்துகிறது.

அ) தமிழின் தொண்டு

ஆ) தமிழுக்குச் செய்யும் தொண்டு

இ) தமிழால் தொண்டு

ஈ) தமிழும் தொண்டும்

விடை : ஆ) தமிழுக்குச் செய்யும் தொண்டு

8) காலம் கரந்த பெயரெச்சம் ------

அ) வினைத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ )  பண்புத்தொகை

ஈ) அன்மொழித்தொகை

விடை : அ) வினைத்தொகை

9) வினைப்பகுதியும் அடுத்துப்
பெயர்ச்சொல்லும் அமைந்த
சொற்றொடர்களிலேயே ----- தொகை அமையும்

அ) வேற்றுமைத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஈ) உவமைத்தொகை

விடை : ஆ) வினைத்தொகை

10 ) ' மை ' என்னும் பண்பு
விகுதியும் ஆகிய , ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வரும் தொகை ----

அ) வினைத்தொகை

ஆ) வேற்றுமைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) உவமைத்தொகை

விடை :  இ) பண்புத்தொகை

11 ) சிறப்புப் பெயர் முன்னும்
பொதுப்பெயர் பின்னும் நின்று
இடையில் ' ஆகிய ' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது

அ ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) வினைத்தொகை

 ஈ) பெயரெச்சம்

விடை :  அ ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

12) சாரைப்பாம்பு ------ தொகையாகும்.

அ) வேற்றுமைத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

விடை : ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

13) உவமைக்கும் பொருளுக்கும்
இடையில் உவம உருபு மறைந்து வருவது

அ ) உவமைத்தொகை

ஆ) உம்மை தொகை

இ) அன்மொழித்தொகை

ஈ) பண்புத்தொகை

விடை :  அ ) உவமைத்தொகை

14) வீசு தென்றல் ------ தொகையாகும்.

அ) வேற்றுமைத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை

 ஈ ) உவமைத்தொகை

விடை : ஆ) வினைத்தொகை

15) மலர்க்கை - இதில் மலர் என்பது ----- ஆகும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ )  உவம  உருபு

ஈ) இடைநிலை

விடை : அ) உவமை

16) இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ----- என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும்.

அ) அம்

ஆ) நும்

இ) உம்

ஈ) ஐ

விடை : இ) உம்

17)உம்மைத்தொகை எண்ணல் ,
எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் நான்கு ----- பெயர்களில் வரும்.

அ ) பண்புப் பெயர்

ஆ) பொருட்பெயர்

இ) காலப்பெயர்

ஈ) அளவுப் பெயர்

விடை :  ஈ) அளவுப் பெயர்

18 ) அண்ணன் தம்பி - விரித்து
எழுதக் கிடைப்பது ---

அ ) அண்ணாதம்பி

ஆ) அண்ணனா ? தம்பியா?

இ) அண்ணனும் தம்பியும்

ஈ) அண்ணதம்பி

விடை :  இ) அண்ணனும் தம்பியும்

19 )சிவப்புச்சட்டை பேசினார்
என்பது ----- தொகை ஆகும்.

அ) பண்புத்தொகை

ஆ) அன்மொழித்தொகை

இ) வேற்றுமைத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை :  ஆ) அன்மொழித்தொகை

20 ) கரும்பு தின்றான் - இத்தொடர் உணர்த்தும் பொருள்

அ) கரும்பைத் தின்றான்

ஆ) கரும்பின் தின்றான்

இ) கரும்பால் தின்றான்

 ஈ) கரும்பினது தின்றான்

விடை :  அ) கரும்பைத் தின்றான்

Post a Comment

0 Comments