12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - அருமை உடைய செயல் - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 12th TAMIL - EYAL - 7 , ONLINE CERTIFICATE TEST - QUESTION & ANSWER

 


12 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 7, அருமை உடைய செயல் 

இயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் :

திருமதி.இரா.மனோன்மணி ,

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.ப., செக்காபட்டி , திண்டுக்கல்.


60% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் பெயர்,
வகுப்பு, மாவட்டம் இவற்றை 97861 41410
என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப்
பெறலாம்.


'பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை.

**************   ************   ************

1) உண்டு , பிறந்த , வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம் ------

அ ) உண்டு

ஆ) பிறந்து

இ) வளர்ந்த

ஈ) இடந்தனில்

விடை : இ ) வளர்ந்த 

2) ' சாப விமோசனம்', அகலிகை ' கதைகளில் தொன்மங்களைப்  பயன் படுத்தியவர் -----

அ ) அழகிரிசாமி

ஆ) புதுமைப்பித்தன்

இ) ஜெயமோகன்

ஈ) எஸ்.இராமகிருஷ்ணன்

விடை : ஆ ) புதுமைப்பித்தன்


3) பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் - விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் ------

அ) சோழன் நெடுங்கிள்ளியை ,
பாணர்

ஆ) சோழன் நலங்கிள்ளியைக்
கோவூர்கிழார்

இ) கணைக்கால் இரும்பொறையை ,
கபிலர்

ஈ) கரிகாலணை உரருத்திரங்கண்ணனார்

விடை : ஆ ) ) சோழன் நலங்கிள்ளியைக்
கோவூர்கிழார்

4) யானை புக்க போலம்போல' - 
இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் ---

அ) தனக்குப் பயன்படும் , பிறருக்குப்
பயன்படாது

ஆ) தனக்கும் பயன்படாது , பிறருக்கும்
பயன்படாது

இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப்
பயன்படாது

ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்படும்

விடை : ஆ ) தனக்கும் பயன்படாது , பிறருக்கும் பயன்படாது.

5)' வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும்ஓர் செய்எனக்காத்து இனிது அரசு
செய்கின்றான் - என்ற அடிகள்
இடம்பெறும் நூல் -----

அ) கம்பராமாயணம்

ஆ) மகாபாரதம்

இ) பெரியபுராணம்

ஈ) சீறாப்புராணம்

விடை : அ ) கம்பராமாயணம்

6) ' ஞாலம் கருதினும் கைகூடும்'
என்று கூறும் நூல் -----

அ) நாலடியார்

ஆ) நான்மணிக்கடிகை

இ) புறநானூறு

ஈ) திருக்குறள்

விடை : ஈ ) திருக்குறள்

7) Internet Banking என்பது ------

அ) அலைபேசி வழி வங்கி முறை

ஆ) தொலைபேசி வழி வங்கி முறை

இ) இணையவழி வங்கிமுறை

ஈ) இவையனைத்தும்

விடை : இ ) இணையவழி வங்கிமுறை

8) ரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இருந்ததைப் பாடிய நூல்

அ ) பட்டினப்பாலை

ஆ) சிலப்பதிகாரம்

இ) மதுரைக்காஞ்சி

 ஈ) மணிமேகலை

விடை : ஆ ) சிலப்பதிகாரம்

9) 27 ஒற்றை வரிகளில் எழுதிய
துளிகள் மூலம் புகழ் பெற்றவர் -----

அ ) ஷேக்ஸ்பியர்

ஆ) ஸ்ட்ரேபோ

இ) ஹிராக்ளிடஸ்

ஈ) ஹெர்குலிஸ்

விடை : இ ) ஹிராக்ளிடஸ்

10) யவனர்களின் கப்பல்கள்  நிறுத்தி வைக்கப்பட்ட மிகப்பெரிய துறைமுகம்

அ) கொற்கை

ஆ) முசிறி

இ) தொண்டி

ஈ) சென்னை

விடை : ஆ ) முசிறி

11) ' பச்சையம் இழந்த சாம்பல் நிலம்' என்பது ----- என ' தமிழ் நதி ' குறிப்பிடுகிறார்.

அ) எரிமலை சிதறிய நிலம்

ஆ) தீப்பிடித்த காடு

இ) போர் நடந்த நிலம்

ஈ) எதுவுமில்லை

விடை : இ ) போர் நடந்த நிலம்

12) ' கங்காணிகள் ' எனக்
குறிப்பிடப்படுபவர்கள் -------

அ) அந்நியர்கள்

ஆ) அரசர்கள்

இ) காவலர்கள்

ஈ) போர்வீரர்கள்

விடை : அ ) அந்நியர்கள்

13) சேகரம் என்பதன் பொருள் -----

அ ) ஓவியம்

ஆ) சேமிப்பு

இ) சக்கரம்

ஈ) பலகாரம்

விடை : அ ) ஓவியம்

14) புறநானூறு ' இதனை
வெளிப்படுத்தவில்லை

அ) கையறுநிலை

ஆ) போர்ச்செய்திகள்

இ) நடுகல்

ஈ) தலைவனின் காதல்

விடை : ஈ ) தலைவனின் காதல்

15) தமித்து, புக்கு, யாத்து ஆகியவற்றின்
இலக்கணக்குறிப்பு -----

அ) வினையெச்சம்

ஆ) பெயரெச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினைத்தொகை

விடை : அ ) வினையெச்சம்

16) வயலைக் குறிக்கும்  சொல் இது இல்லை

அ) செய்

ஆ) கழனி

இ) வேய்

ஈ) செறு

விடை : இ ) வேய்

17) புகளூர்க் கல்வெட்டு அமைந்திருந்த இடம் ------

அ) திருப்பரங்குன்றம் மலை

ஆ) பச்சை மலை

இ) விராலி மலை

ஈ) ஆறுநாட்டான் குன்று

விடை : ஈ ) ஆறுநாட்டான் குன்று

18 ) ' Mith' என்பதன் தமிழாக்கம் ------

அ) மெய்

ஆ) தொன்மம்

இ) உறுதி

ஈ) கலை

விடை : ஆ ) தொன்மம்

19 ) பொருந்தாதைத் தேர்வு செய்க.

அ ) சூரியன் - சோல்

ஆ) கணேசன் - ஜோனஸ்

இ) துர்க்கை - மினர்வா

ஈ) காமன் - இராஸ்

விடை : இ ) துர்க்கை - மினர்வா

20 ) ' காய்நெல் அறுத்துக் கவளம்
கொளினே ' என்ற    புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் ------

அ) கபிலர்

ஆ) ஔவையார்

இ) நக்கீரர்

ஈ) பிசிராந்தையார்

விடை : ஈ ) பிசிராந்தையார்

*******************  ***********  ***********


Post a Comment

0 Comments