12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 6 , சிறுகை அளாவிய கூழ் - வினா & விடை / 12th TAMIL - EYAL 6 , ONLINE CERTIFICATE TEST - QUESTION & ANSWER

 


12 ஆம் வகுப்பு - 

தமிழ் - இயல் - 6 , 

சிறுகை அளாவிய கூழ் 

இயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத்தமிழாசிரியை , அ.மே.நி.பள்ளி ,
செக்காபட்டி , திண்டுக்கல்.

60% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

6 முதல் 12 வகுப்பு வரையிலான பாடங்களுக்கான காட்சிப்பதிவுகள் , வினாத்தாள் , TNPSC , TRB தேர்வுக்குறிப்புகள் , தினம் ஒரு ஆன்லைன் தேர்வு லிங்க் பெற 97861 41410 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

****************   ************   ************

1) ஆமந்திரிகை என்பது ------ வாத்தியம்

அ) இடக்கை

ஆ) வலக்கை

இ) தோற்கருவி

ஈ) எதுவுமில்லை

விடை :  அ ) இடக்கை வாத்தியம்

2) சிலப்பதிகாரத்தின் காப்பியச் சிற்றுறுப்பு -

அ) சருக்கம்

ஆ) இலம்பகம்

இ ) காதை

ஈ ) படலம்

விடை :  இ ) காதை 

3) ஐம்பெருங்காப்பியம் என்னும்
சொற்றொடரைத் தம் உரையில்
குறிப்பிட்டவர் -----

அ) சிவஞான முனிவர்

ஆ) மயிலைநாதர்

இ) ஆறுமுகநாவலர்

ஈ) இளம்பூரணர்

விடை : ஆ ) மயிலை நாதர்

4) ' Animation' என்பது ------

அ) செய்திப்படம்

ஆ) இயங்குபடம்

இ) குறும்படம்

ஈ) ஒளிப்பதிவு

விடை :  ஆ ) இயங்குபடம்

5) உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு ----- அன்னார்
உடைத்து.

அ) அச்சாணி

ஆ) திண்ணியர்

இ) கேள்போல்

ஈ) மெய்ப்பொருள்

விடை : அ ) அச்சாணி 

6) ' திண்ணியர்' என்ற சொல்லின் பொருள் ------

அ) அறிவுடையவர்

ஆ) மன உறுதி உடையவர்

இ ) தீக்காய்வர்

ஈ) அறிவினார்

விடை : ஆ ) மன உறுதி உடையவர்

7) ' சொல்லுதல்' என்பது -----

அ) தொழிற்பெயர்

ஆ) பண்புப்பெயர்

இ) வினையாலணையும் பெயர்

ஈ) உவமை

விடை : அ ) தொழிற்பெயர்

8) அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்

அ)தாமஸ் ஆல்வா எடிசன்

ஆ) ஐன்ஸ்டீன்

இ) ஸ்டீபன்பர்க்

ஈ) சார்லஸ்

விடை : அ ) தாமஸ் ஆல்வா எடிசன்

9) நம் ஒவ்வொருவரிடமும் உள்ள படப்பிடிப்புக்கருவி -----

அ) புகைப்படக்கருவி

ஆ) கண்

இ )  கருத்து

ஈ) கனவு

விடை : ஆ ) கண்

10 ) காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டுவது

அ ) குலஷோவ் விளைவு

ஆ) கார்பஷேவ் விளைவு

இ) சேப்ளின் விளைவு

ஈ) போன் விளைவு

விடை : அ ) குலஷோவ் விளைவு 

11) பல பொதுவுடைமை நாடுகளில் தடை
செய்யப்பட்ட சாப்ளினின் திரைப்படம் -

அ) தி சர்க்கஸ்

ஆ) மாடர்ன் டைம்ஸ்

இ) தி கிரேட் டிக்டேட்டர்

ஈ) சிட்டி லைட்ஸ்

விடை : ஆ ) மாடர்ன் டைம்ஸ்

12) கவிஞர் நகுலனின் பார்வையில் ' ஆர்ப்பரிக்கும் கடல்' என்பது

அ ) அரபிக்கடல்

ஆ) சுனாமி அலை

இ) ஆசையால் அலைபாயும் மனம்

ஈ) புயலின் தாக்குதல்

விடை : இ ) ஆசையால் அலைபாயும் மனம்

13 ) சிலப்பதிகாரம் இவ்வாறு
அழைக்கப்படுவதில்லை

அ) குடிமக்கள் காப்பியம்

ஆ) புரட்சிக்காப்பியம்

இ) நீதிக்காப்பியம்

ஈ) முத்தமிழ் காப்பியம்

விடை : இ ) நீதிக்காப்பியம்

14 ) மாதவிக்கு வழங்கிய பட்டம் -----

அ) தலைக்காவிரி

ஆ) நாட்டியப்பேரொளி

இ) தலைக்காலி

ஈ) தலைக்கோலி

விடை : ஈ ) தலைக்கோலி 

15 ) எண்வகை மெய்ப்பாட்டைப்பாடும்
தொல்காப்பிய நூற்பா -----

அ) தொல் - 1107

ஆ) தொல்.1017

இ) தொல்.1097

ஈ) தொல்.1197

விடை : ஈ ) தொல்.1197

16 ) சரியான பிரிப்பு முறையைத் தேர்க.

அ) மரு+ ள் + க் + கை

ஆ) மருள் + கை

இ) மருள் + க் + ஐ

ஈ) மரு + ள் + கை

விடை : ஆ ) மருள் + கை 

17) ' செயிற்றியம்' என்பது -----

அ) நாடக இலக்கண நூல்

ஆ) யாப்பிலக்கண நூல்

இ) பொருளிலக்கண நூல்

ஈ) சொல்லிலக்கண நூல்

விடை : அ ) நாடக இலக்கண நூல்

18) தண்டியலங்காரத்தில் காப்பியத்தைக்
குறிக்கும் செய்யுள் வகை ------

அ) குளகம்

ஆ) தொடர்நிலை

இ) முத்தகம்

ஈ) தொகைநிலை

விடை : ஆ ) தொடர்நிலை

19) காப்பியத்தை ஆங்கிலத்தில் -------
என்பர்.

அ ) VERSE

ஆ) EPIC

இ) POEM

ஈ ) PROSE

விடை : ஆ ) EPIC 

20 ) " பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப ' என்பது ----- நூலின் பாவிகம்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மகாபாரதம்

இ) கம்பராமாயணம்

ஈ ) மணிமேகலை


விடை : இ ) கம்பராமாயணம்

Post a Comment

0 Comments