12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , நாடென்ப நாட்டின் தலை - இயங்கலைத்தேர்வு - வினா & விடை / 12th TAMIL - EYAL - 5 . ONLINE CERTIFICATE TEST

 

12 ஆம் வகுப்பு - பொதுத்தமிழ் 

இயல் 5 - நாடென்ப நாட்டின் தலை 

 நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு - 5

வினா உருவாக்கம் 

 திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை , 

செக்காபட்டி, திண்டுக்கல்.


பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர்
, மதுரை - 97861 41410

******************   ************  *********

1) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் -

இத்தொடர் உணர்த்தும் பண்பு --

அ) நேர்மறை

ஆ) எதிர்மறை

இ) முரண்

ஈ) இவை அனைத்தும்

விடை : இ ) முரண்

2) ஆன்மநேய , சமய ஒருமைப்பாட்டையும், ஒளி வழிபாட்டையும் உருவாக்கி   வளர்த்தவர்

அ ) இராமலிங்க அடிகள்

ஆ) திருஞானசம்பந்தர்

இ) பாரதியார்

ஈ) சுந்தரர்

விடை : அ ) இராமலிங்க அடிகள்

3) திருவருட்பாவிலுள்ள திருமுறைகள்

அ ) இரண்டு

ஆ) ஐந்து

இ) ஆறு

 ஈ) எட்டு

விடை : இ ) ஆறு

4)------ அருளை வேண்டி தெய்வ 
மணிமாலை பாடப்பட்டது.

அ ) அழகர்கோவில் அழகரின்

ஆ) சுவாமிமலை முருகனின்

இ) கந்தகோட்டத்து முருகப்பெருமானின்

ஈ) பழனிமலை முருகப்பெருமானின்

விடை : இ ) கந்தகோட்டத்து முருகப்பெருமான்

5) மனுமுறை கண்ட வாசகம் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய
உரைநடை நூல்களை எழுதியவர் -----

அ) திருஞானசம்பந்தர்

ஆ) அப்பர்

இ )  மாணிக்கவாசகர்

ஈ) இராமலிங்க அடிகள்

விடை : ஈ ) இராமலிங்க அடிகள்

6) ' மலரடி' - இலக்கணக்குறிப்பு 

அ) உவமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) எண்ணும்மை

ஈ) பண்புத்தொகை

விடை : அ ) உவமைத்தொகை

7) நினைக்கின்ற - புணர்ச்சி விதி

அ) நினை + க் + கின்று + அ

ஆ) நினை + க் + க் + இன்ற

இ) நினை + க் + இன்ற

ஈ) நினைக் + கின்ற

விடை : அ ) நினை + க் + கின்று + அ

8) சைவத்திருமறைகளின் எண்ணிக்கை

அ) 6

ஆ) 10

இ) 12

ஈ) 14

விடை : இ ) 12

9) பன்னிரு திருமறைகளைத்
தொகுத்தவர் -----

அ) இராஜராஜ சோழன்

ஆ) நாதமுனிகள்

இ) நம்பியாண்டார் நம்பி

ஈ) கூடலூர்க்கிழார்

விடை : இ ) நம்பியாண்டார் நம்பி

10) மடநல்லார் - எனப்படுவோர்

அ) இளமையான பெண்கள்

ஆ) ஆண்கள்

இ) குழந்தை

ஈ) முதுபெண்கள்

விடை : அ ) இளமையான பெண்கள்

11) திருவிழாக்கள் நிறைந்த
வீதிகளையுடைய ஊர் -----

அ) திருமயிலை

ஆ) திருவேங்கடம்

இ) திருவொற்றியூர்

ஈ) திருப்புவனம்

விடை : அ ) திருமயிலை

12 ) ஒன்று முதல் ஏழு வரையுள்ள
திருமுறைகளுக்கு ----- என்று பெயர் .

அ) தேவாரம்

ஆ) திருவாசகம்

இ) திருவருட்பா

ஈ) தெய்வமணிமாலை

விடை : அ ) தேவாரம்

13) ' ஒலிவிழா' - இலக்கணக் குறிப்பு -----

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) முற்றும்மை

ஈ) உம்மைத்தொகை

விடை : ஆ ) வினைத்தொகை

14 ) ' மாமயிலை' - இலக்கணக்,குறிப்பு

அ ) பெயரெச்சம்

ஆ) வினையெச்சம்

இ) உரிச்சொற்றொடர்


ஈ) பண்புப்பெயர்

விடை : இ ) உரிச்சொற்றொடர்

15) பூம்பாவாய் - புணர்ச்சி விதி 

அ) பூப்பெயர் முன் இனமென்மையும்
தோன்றும்

ஆ) ஈறுபோதல்

இ) இனமிகல்

ஈ) ஆதிநீடல்

விடை : அ ) பூப்பெயர் முன் இனமென்மையும்

16)' ஒரு குட்டித் தீவின் வரைபடம்
' என்ற சிறுகதைத் தொகுப்பின்
ஆசிரியர் -----


அ) தோப்பில் முகமது மீரான்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) பாலச்சந்திரன்

ஈ) நகுலன்

விடை : அ ) தோப்பில் முகமது மீரான்

17 ) 1997 ல் சாகித்ய அகாதமி
விருது பெற்ற தோப்பில் முகமது
மீரான் அவர்களின் புதினம் ------

அ) ஒரு குட்டித்தீவின் வரைபடம்

ஆ) சாய்வு நாற்காலி

இ) துறைமுகம்

ஈ) கூனன் தோப்பு

விடை : ஆ ) சாய்வு நாற்காலி

18 ) தம்முடைய வட்டார எழுத்திற்கு கரிசல் இலக்கியம்' என்று பெயரிட்டவர்

அ புதுமைப்பித்தன்

ஆ) ஜெயகாந்தன்

இ) தி.ஜானகிராமன்

ஈ) கி.இராஜநாராயணன்

விடை : ஈ ) கி.இராஜநாராயணன்

19 ) தற்போது கிராமங்கள் ----- ஐ
இழந்து வருகிறது.

அ ) முதலீட்டை

ஆ) வருவாயை

இ) முகவரியை

ஈ) வியாபாரத்தை

விடை : இ ) முகவரியை 

20) 'தலைக்குளம் ' கதையில்
இயற்கை நேசன் என்று
விவரிக்கப்பட்டவர் --

அ) கதாசிரியர்

ஆ) ஓய்வு பெற்ற நீதிபதி

இ) மூத்த மகன்

ஈ ) வாப்பா

விடை : ஆ) ஓய்வு பெற்ற நீதிபதி

Post a Comment

0 Comments