12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் - 4 , செல்வத்துள் எல்லாம் தலை - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 12th TAMIL - EYAL 4 - ONLINE CERTIFICATE TEST

 

-

12 ஆம் வகுப்பு - தமிழ் -  இயல் - 4

செல்வத்துள் எல்லாம் தலை 

நிகழ்நிலைத் தேர்வு

வினா உருவாக்கம் -

 திருமதி.மனோன்மணி ,

முதுகலைத்தமிழாசிரியை , செக்காபட்டி ,

திண்டுக்கல்.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை 

- 97861 41410

**************    **************   ************

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமா ? 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கான காட்சிப்பதிவுகள் , வினா & விடை , TNPSC , TRB , UBSC - போட்டித் தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள்  உங்களுக்கு வேண்டுமா ? - 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். வெற்றி உங்களுக்கே !

***************   ************  ************** 


1) சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

அ ) வசம்பு
ஆ ) மணத்தக்காளிச்சாறு
இ ) கடுக்காய்
ஈ ) மாவிலைக்கரி

விடை : இ ) கடுக்காய்

2) ' கணக்காயர்' என்பவர் ------

அ ) உரையாசிரியர்
ஆ ) நூலாசிரியர்
இ ) மொழிபெயர்ப்பாளர்
ஈ ) உபாத்தியாயர்

விடை : ஈ ) உபாத்தியாயர்

3) ' அஷராப்பியாசம் ' என்பது -----
எனப்படும்

அ ) எழுத்துப்பயிற்சி
ஆ ) சொற்பயிற்சி
இ ) கவிதைப்பயிற்சி
ஈ ) இலக்கணப்பயிற்சி

விடை : அ )  எழுத்துப்பயிற்சி 

4) " ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார்
கலைகள் " எனக்கூறும் நூல் 

அ )  நன்னூல்
ஆ ) பழைய வெண்பா
இ ) தமிழ்விடுதூது
ஈ ) சிந்தாமணி

விடை : ஈ ) சிந்தாமணி 

5) " மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு
முல்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் "
எனத் தமிழ் மொழியைச் சிறப்பித்துக் கூறும்  நூல்

அ ) குடும்ப விளக்கு
ஆ ) தமிழ்விடுதூது
இ ) நன்னூல்
ஈ ) தொல்காப்பியம்

விடை : ஆ ) தமிழ்விடுதூது

6) பள்ளிக்கு முதலில் வருபவரை ------
என்பர்.

அ ) முதலான்
ஆ ) வேத்தான்
இ ) சட்டாம் பிள்ளை
ஈ ) சிசியான்

விடை : ஆ ) வேத்தான்


7) சென்னையில் உ.வே.சா பெயரில்
நூலகம் அமைந்துள்ள இடம்

அ ) அடையாறு
ஆ ) அண்ணாநகர்
இ ) திருவான்மியூர்
ஈ ) மயிலாப்பூர்

விடை : இ ) திருவான்மியூர் 

8) திருமணம் முடிந்த பின் கல்வி கற்கப்
பிரியும் காலம்  ----- வருடங்கள்.

அ ) 1
ஆ ) 2
இ ) 3
4 ) 5

விடை : இ ) 3 


9) உவமைக்கவிஞர்.சுரதா நடத்திய கவிதை இதழ் -----

அ ) இலக்கியம்
ஆ ) காவியம்
இ ) ஊர்வலம்
ஈ ) விண்மீன்

விடை : ஆ ) காவியம்

10 ) வெண்மதி, செங்கதிர்
இலக்கணக்  குறிப்பு ------

அ ) பண்புத்தொகை
ஆ ) வினைத்தொகை
இ ) வினையாலணையும் பெயர்
ஈ ) தொழிற்பெயர்

விடை : அ ) பண்புத்தொகை

11 ) இரண்டு சீரின் இடைவெளியில் வருவது -----

அ ) எழுத்து
ஆ ) சீர்
இ ) தளை
ஈ ) அடி

விடை : இ ) தளை

12) மக்கள் பேசும் எளிய சொற்கள்
தொடர்களாக அமைவது -----

அ ) கவிதை
ஆ ) சிறந்த படைப்பு
இ ) யாப்பிலக்கணநெறி
ஈ  ) உரைநடை

விடை : ஈ ) உரைநடை

13 ) வேறாயினும் விண்வெளியில்
இயங்குபவை -------

அ ) வெண்மதி , செங்கதிர் , மழை
ஆ ) செங்கதிர், முகில் , பனித்துளி
இ ) வெண்மதி, செங்கதிர் , முகில்
ஈ ) வெண்மதி , முகில் , மழை

விடை : இ ) வெண்மதி , செங்கதிர் , மழை

14) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே -------- ஆகும்.

அ ) எதுகை
ஆ ) மோனை
இ ) வசனம்
ஈ ) கவிதை

விடை : ஈ ) கவிதை

15) மம்மர் அறுக்கும் மருந்து - இவ்வடியில்
ஈற்றுச்சீர் வாய்பாடு -----

அ ) நாள்
ஆ ) மலர்
இ ) காசு
ஈ ) பிறப்பு

விடை : ஈ ) பிறப்பு 

16) ' காசு ' என்னும் வாய்பாட்டால் முடிந்த
ஈற்றடி ----

அ ) பழக்கத்தால் வாய்ப்பது தான் யார்
ஆ ) கூசாமல் கண்காத்தல் கூறு
இ ) ஓயாமல் நீயும் உயர்த்து
ஈ ) நெடுதலையில் நிற்பாய் நினை

விடை : ஆ ) கூசாமல் கண்காத்தல் கூறு

17)' நேரிசை வெண்பா என்பது ------
அடிகளால் அமையும்.

அ ) இரண்டு
ஆ ) மூன்று
இ ) பன்னிரண்டு
ஈ ) நான்கு

விடை : ஈ ) நான்கு

18 ) மூன்று அடிகளால் பாடப்படுவது -----

அ ) குறள் வெண்பா
ஆ ) கலிவெண்பா
இ ) சிந்தியல் வெண்பா
ஈ ) இன்னிசை வெண்பா

விடை : இ ) சிந்தியல் வெண்பா

19 ) இரண்டாம் அடியின் இறுதியில்
தனிச்சொல் பெற்றுவருவது -----

அ ) இன்னிசை சிந்தியல் வெண்பா
ஆ ) இன்னிசை வெண்பா
இ ) கலிவெண்பா
ஈ ) நேரிசை வெண்பா

விடை : ஈ ) நேரிசை வெண்பா

20) Passport என்பதன் தமிழ்ச்சொல்

அ ) கடவுச்சீட்டு
ஆ ) பயணச்சீட்டு
இ ) அனுமதிச்சீட்டு
ஈ ) நுழைவுச்சீட்டு

விடை : அ ) கடவுச்சீட்டு 

Post a Comment

0 Comments