12 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத் தேர்வு - நவம்பர் - 2021 - 50 மதிப்பெண்கள் / 12th TAMIL - UNIT TEST - NOVEMBER - 2021 - QUESTION

 

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தமிழ் 

அலகுத்தேர்வு   - நவம்பர் - 2021 

நேரம் : 1:30 மணி         மதிப்பெண்கள்  - 50

**************   ***********   *************

பாடப்பகுதிகள் 

1 முதல் 4 இயல்கள்

பாடத்திட்டம் 2020-2021

இயல் - 1

செய்யுள் - இளந்தமிழே
உரைநடை - தமிழ்மொழியின் நடை அழகியல்
செய்யுள் - தன்னேர் இலாத தமிழ்
துணைப்பாடம் - தம்பி நெல்லையப்பருக்கு

இலக்கணம் - தமிழாய் எழுதுவோம்


இயல் - 2

செய்யுள் - பிறகொருநாள் கோடை
இலக்கணம் - நால்வகைப் பொருத்தங்கள்

இயல் - 3

உரைநடை - தமிழர் குடும்பமுறை
செய்யுள் - விருந்தினர் இல்லம், கம்பராமாயணம்
துணைப்பாடம் - உரிமைத்தாகம்
இலக்கணம் - பொருள் மயக்கம்
வாழ்வியல் - திருக்குறள்

இயல் - 4

உரைநடை - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
செய்யுள் - இதில் வெற்றிபெற
இலக்கணம் - பா இயற்றப் பழகலாம்

*************   **************   ***********

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                             8 × 1 = 8

1 ) ' செம்பரிதி மலைமேட்டில் ' எனத்தொடங்கும் சிற்பியின் பாடல் இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு -----

அ ) தமிழ்ப்பூ 

ஆ ) அல்லிப்பூ 

இ ) இரவுப்பூ 

ஈ ) நிலவுப்பூ

2 ) இலக்கியத்தையும் , இலக்கணத்தையும் ஒரு சேரப்பேசுகின்ற இலக்கண நூல் -----

அ ) யாப்பருங்கலக்காரிகை

ஆ ) தண்டியலங்காரம்

இ ) தொல்காப்பியம்

ஈ ) நன்னூல்

3 ) தமிழில் திணைப்பாகுபாடு ----- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ ) பொருட்குறிப்பு 

ஆ ) சொற்குறிப்பு 

இ ) தொடர்க்குறிப்பு

ஈ ) எழுத்துக்குறிப்பு

4 ) நரம்புகளுக்குள் வீணை மீட்டிப் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது -----

அ ) சூரிய ஒளிக்கதிர்

ஆ ) மழைமேகங்கள்

இ ) மழைத்துளிகள்

ஈ ) நீர்நிலைகள்

5 ) " உவாஉற வந்து கூடும்

      உடுபதி , இரவி ஒத்தார் " - யார் அவர் ?

அ ) சடாயு , இராமன்

ஆ ) இராமன் , குகன்

இ ) இராமன் , சுக்ரீவன்

ஈ ) இராமன் , சவரி

6 ) வல்லினம் மிகும் , மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.

அ )பாலை பாடினான்  - 1 ) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்

ஆ ) பாலைப்பாடினான் - 2 ) தேரினைப் பார்த்தான்

இ ) தேரை பார்த்தான் - 3 ) பாலினைப் பாடினான்

ஈ ) தேரைப்பார்த்தான் - 4 ) பாலைத்திணை பாடினான்

அ ) 4,1,3,2

ஆ ) 2,3,1,4

இ ) 4,3,,1,2

ஈ  ) 2,4,1,3

7 )'  குழிமாற்று ' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ?

அ ) இலக்கியம்

ஆ ) கணிதம்

இ ) புவியியல்

ஈ ) வேளாண்மை

8 ) ARRAIVAL என்பது ----

அ ) புறப்பாடு

ஆ) வருகை

இ ) நுழைவு இசைவு

ஈ ) கடவுச்சீட்டு

II ) எவையேனும மூன்றனுக்கு மட்டும் விடை தருக.                               3 × 2 = 6

9 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக. ( ஒன்றனுக்கு மட்டும் ) 

i ) வியந்து

ii ) தந்தனன்

10 ) இலக்கணக் குறிப்பு தருக.

அ ) தாழ்கடல்

ஆ ) உயர்ந்தோர்

11 ) புணர்ச்சி விதி தருக.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும்.

அ ) ஆங்கவற்றுள்

ஆ ) அருங்கானம்

12 ) கலைச்சொல் தருக.

அ ) Fiction 

ஆ ) Lobby

III ) குறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும் )                                         2 × 2 = 4

13 ) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

14 ) ' நகரம் பட்டை தீட்டிய வைரம் ஆகிறது ' - விளக்கம் தருக.

15 ) புக்கில் , தன்மனை - குறிப்பு வரைக.

16 ) அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை ?

IV ) சிறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் )                                  3 × 4 = 12

17 ) சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

18 ) ' துன்பு உளது ' எனத்தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதி பாவகை சுட்டுக.

19 ) பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்குக.

20 ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியைச் சுட்டுக.

V ) நெடுவினா ( அனைத்து வினாக்களுக்கும் விடையளி )                               3 × 6 = 18

21 ) கவிதை நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

                             அல்லது

இலக்கிய நயம் பாராட்டுக.

வெட்டி யடிக்குது மின்னல் - கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம் - கூ

    கூ வென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 

   தாளங்கள் கொட்டிக் கனைக்குது - வானம்

எட்டுத் திசையும் இடிய  - மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா ! 

                                            - பாரதியார்

22 ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் , பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

                                  அல்லது

பண்டைக்கால கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் , கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.

23 ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று , சமூகப்பற்று ஆகியவற்றை விளக்குக.

                             அல்லது

' உரிமைத்தாகம் ' - கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ----- கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க

VI ) ' வையத்துள் ' எனத்தொடங்கும் குறட்பாவை அடிபிறழாமல் எழுதுக. 1 × 2 = 2

***************  *************  ***********

வினா உருவாக்கம்

திருமதி இரா.மனோன்மணி ,

முதுகலைத்தமழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி, 

திண்டுக்கல் 

****************  ***************  *********

வாழ்த்துகள் நண்பர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

தமழாசிரியர் , மதுரை - 97861 41410

**************   ****************  ***********

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.

*****************   *************  ***********


Post a Comment

0 Comments