பள்ளிக் கல்வித்துறை
விழுப்புரம் மாவட்டம்
அலகுத் தேர்வு 1 - நவம்பர் - 2021
வகுப்பு - 12
பாடம் : தமிழ் மதிப்பெண் - 50
I . அனைத்துவினாக்களுக்கும் விடை தருக. 8 × 1 = 8
1 ) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க
அ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
ஆ வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
இ அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஈ) மயில்கள் விறலியரைப்போல் ஆடுகின்றன
2) பொருத்துக
அ) ஒரு கிராமத்து நதி-1) அய்யப்ப மாதவன்
ஆ ) ஆதிறனாய்வுக்கலை - 2) பாலசுப்பிரமணியம்
இ) உய்யும் வழி - 3 ) தி.சு. நடராஜன்
ஈ) நீர்வெளி - பரலி சு. நெல்லையப்பர்
அ) 4 3 2 1 ஆ ) 1 4 2 3 இ ) 2 4 1 3 ஈ ) 2 3 4 1
3) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது
அ) மழைமேகங்கள்
ஆ ) மழைத்துளிகள்
இ ) நீர்நிலைகள்
ஈ) சூரிய ஒளிக்கதிர்
4) பொருந்தாத இணையைத் தேர்க.
அ) ஒவ்வொரு - ஒருமை
ஆ சொல்+துணை - சொற்றுணை
இ வியர்வை வெள்ளம் - வினைத்தொகை
ஈ) செம்பரிதி - ஈறுபோதல்
5 ) 'வந்து' - சரியான உறுப்பிலக்கணம் பிரிப்பு முறை
அ) வா+த்(நி+த்+உ
ஆவா ந்+த்+உ
இவாந்(த்)+த்+உ .
ஈ)வா(வ)+த்(ந்)+த்-உ
6) கருத்து 1. இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே
மரபு
கருத்து 2 . தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து சரி 2 தவறு
இ) இரண்டு கருத்தும் தவறு
ஈ) கருத்து தவறு 2சரி .
7) யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள்
அ) அஃறிணை உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை உயர்திணை
8 ) தண்டியலங்காரம் எந்த இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
அ) வீரசோழியம்
ஆ முத்துவிரியம்
இ ) காவியதர்சம்
ஈ) சூரியோதயம்
II.அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக,
3 x 2 - 6
9) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டுகிறார் ?
10) ஒலிப்பின்னல் என்றால் என்ன?
11)"நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது " விளக்குக.
12) அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
III ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 2- 6
13) உளப்பாட்டுத் தன்மை பன்மை என்றால் என்ன?
14) இரண்டனுக்குப் புணர்ச்சி விதி கூறுக
அ) சுவரெங்கும்
ஆ வெங்கதிர்
இ) உன்னையல்லால்
15) "தாமரை இலை நீர்போல" - உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
16) "விலை, விளை விழை" - மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
IV .அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
3 x 4 -12
17) "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப்பூக்காடாம்
வானமெல்லாம் - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக
18) கவிதைத்தனம் அல்லது இலக்கியத்தனம் குறித்துத் தி.சு, நடராஜன் உரைக்கும் கருத்துகள்
யாவை?
19) பிறகொருநாள் கோடை " கவிதை வழியாக அய்யப்ப மாதவன் கூறும் கருத்துகள் யாவை?
20) பொருள் வேற்றுமை அணியைச்சான்றுடன்விளக்குக.
ஆ எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 × 4 = 8
21) தமிழாக்கம் தருக.
1) Learning is a treasure that will follow its owner.
2) A new language is a new life.
3) Knowledge of languages is the doorway to wisdomi.
4 The limits of my language are the limits of my world.
22) கீழ்வரும் பாடலைப் படித்துணர்ந்து மையக்கருத்தோடு ஏற்புடைய நயங்கள் நான்கினை எழுதுக.
வெட்டி யிடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட்டட்டா- என்று
தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய- மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
- பாரதியார்
23) மழை " அல்லது "தமிழ்"- என்னும் தலைப்பில் கவிதை எழுதுக
IV) ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக
1 x 6 = 6
24) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று மற்றும்
சமூகப்பற்றினை விவரிக்க.
25) கவிதையைக்கட்டமைக்கும் நடையியல் கூறுகளைச்சான்றுடன் விளக்குக.
1) அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 1 X 4 - 4
26. "ஓங்கலிடை வந்து என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்.
*************** **************** **********
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கான வினாத்தாள்கள் , விடைக்குறிப்புகள் , தினம் ஒரு ஆன்லைன் தேர்வு எழுத விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
*************** *********** ************
0 Comments