பொதுத்தமிழ் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு
- இயல் 2- பெய்யெனப். பெய்யும் மழை -
இயங்கலைத் தேர்வு - வினா & விடை
வினா உருவாக்கம் -
திருமதி.சா.சாந்தி ஸ்டெல்லா ,
முதுகலைத் தமிழாசிரியை .
அ.பெ.மே.நி.பள்ளி , அலங்காநல்லூர் ,
மதுரை.
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கான
மதிப்பெண் 80 % பெற்றும் சான்றிதழ்
கிடைக்கப்பெறாத மாணவர்கள் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். சரியான மின்னஞ்சல்
முகவரி கொடுத்துத் தேர்வு எழுதவும்.
*************** ********** ***************1) ஆண்டுதோறும் உலகச் சுற்றுச்சூழல் நாள் ----- அன்று கொண்டாடப்படுகிறது.
அ) ஜூன் 5
ஆ) ஜூலை 15
இ) ஆகஸ்டு 26
ஈ) நவம்பர் 14
2) ஆயர் எதனால் வருத்தம் அடைந்தனர்?
அ) மேகம் சூழ்ந்ததால்
ஆ) புதிய மழை பொழிந்ததால்
இ) நிரைகளை மேடான இடத்தில் மேயவிட்டதால்
ஈ) பசு மேய்ப்பதால்
3) UNFCCC அமைப்பில் உள்ள
நாடுகளின் எண்ணிக்கை ----
அ) 173
ஆ) 183
இ ) 193
ஈ) 147
4) புயல் , பெருமழை , பெருவெள்ளம் ஏற்படக் காரணம்
அ ) அதிக மழைப்பொழிவு
ஆ) சரியான திட்டமிடல் இல்லை
இ) இயற்கை சமநிலை இழத்தல்
ஈ) மேலாண்மைத் துறையில்
கவனக்குறைவு
5) புயல்களுக்குப் பெயர் வைக்கும் சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனத்தின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள
நாடுகளின் எண்ணிக்கை
அ ) 8
ஆ) 10
இ) 6
ஈ) 9
6) வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ ) பருவநிலை மாற்றம்
ஆ) மணல் அள்ளுதல்
இ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
ஈ) பாறைகள் இல்லாமை
7) அஃறிணையை அறிய உதவும்
வினாச்சொல் பயனிலை எது?
அ) யார் ?
ஆ) எவன்?
இ) எது?
ஈ) எவர் ?
8) ஒரு தொடரில் எழுவாய் சொல்லாக ----- அமையும்.
அ) வினை
ஆ) உரி
இ) பெயர்
ஈ) இடை
9 ) தமிழில் திணைப்பாகுபாடு ------ அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
10 ) ஆண்டு தோறும் உலகப் புவிநாள் கொண்டாடப்படும் நாள்
அ) ஏப்ரல் 22
ஆ) நவம்பர் 7
இ) நவம்பர் 30
ஈ) மே 14
11) காலநிலை மாற்றத்திற்கு மாற்று ஆற்றலாக இருப்பது ----
அ) கார்பன் அற்ற ஆற்றல்
ஆ) ஆக்சிஜன் அற்ற ஆற்றல்
இ) ஹைட்ரஜன் அற்ற ஆற்றல்
ஈ) எதுவும் இல்லை
12), வெற்றியின் அடையாளமாகச் சூடும் பூ
அ ) காந்தள் பூ
ஆ) கரந்தைப் பூ
இ) வஞ்சிப் பூ
ஈ) வாகைப் பூ
13) குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தவை
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) மனிதர்கள்
ஈ) கடல் உயிரினங்கள்
14 ) முதல் கல் என்னும் கவிதையை எழுதியவர் -----
அ) கவிஞர்.சிற்பி பாலசுப்ரமணியன்
ஆ) தி.சு.நடராஜன்
இ ) உத்தமசோழன்
ஈ ) நக்கீரர்
15 ) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
அ) நன்னூல்
ஆ) நெடுநல்வாடை
இ) பரிபாடல்
ஈ) புறநானூறு
16) பொய்யா வானம் - இலக்கணக் குறிப்பு தருக.
அ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ ) இடைச்சொல்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
17) ' நரம்புகளுக்குள் வீணையை
மீட்டிக் கொண்டிருக்கிறது' என்று
கவிஞர் அய்யப்ப மாதவன்
குறிப்பிடுவது
அ ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
18,) பட்டை தீட்டிய வெள்ளை வைரமாய் ஆகிறது -----
அ) வெளிச்சம்
ஆ) நீர்நிலை
இ) மரங்கள்
ஈ) நகரம்
19) நெடுநல்வாடை நூலின் ஆசிரியர் -----
அ) ஔவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) நக்கீரர்
20 ) ' உயர்திணை என்மனார்மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே' -
இந்நூற்பா இடம்பெற்ற நூல் ----
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) திருக்குறள்
ஈ) அகத்தியம்
2 Comments
Mm
ReplyDeleteHdjgyhfyjgyhfthggjh
ReplyDelete