எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 11 , மயங்கொலிச் சொற்கள் / 8th TAMIL - ACTIVITY 11 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 11

மயங்கொலிச் சொற்களை

முறையாக ஒலித்தல்

வினாக்களும் விடைகளும்

திறன்/கற்றல் விளைவு

6.12 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை,குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

          மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே  ஒலிப்பினைக்  கொண்டவையாகவும் முற்றிலும் வேறுபட்ட பொருள்களைத் தருவனவாகவும் காணப்படும்.

           இவ்வகையான சொற்கள் ஒலிப்பின்போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டதாக அமையும்.

ல  - முதல் லகரம்

ழ - சிறப்பு ழகரம்

ள - பொது ளகரம்

ர - இடையின ரகரம்

ற - வல்லின றகரம்

ண - டண்ணகரம்

ந - தந்நகரம்

ன - றன்னகரம்மயங்கொலி எழுத்துகள் இடம்பெற்ற தொடர்களையும் பாடலையும் படித்துப்
பழகுவோம்.

ஒலிப்புப் பயிற்சி (நா பிறழ் பயிற்சி)

1 ) ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு
வாழைப்பழம்.

2 ) பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

3 ) கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது.

4. வீட்டுக்கிட்ட கோரை. வீட்டுக்கு மேல கூரை. கூரை மேல நாரை.

5. ஓடும் நரிகளில் ஒரு நரி குள்ள நரி கிழ நரி முதுகினில் ஒரு பிடி நரை மயிர்.

6. வாழைப்பழத் தோல் சறுக்கி
 விழுந்தவரை ஏழைக் கிழவர் எழுப்பினார்.

பாடல்: 1

காலை நேரச் சூரியனைக்
காளை ஒன்று பார்க்கிறதே
கோலைக் கண்டால் ஓடுபவரைக்
கோழை என்றே உரைக்கிறதே
வாளைக் கண்டும் ஒதுங்காது
வாலை முடுக்கிப் பாய்கிறதே
வேலை தேடிச் செல்கிறதே
வேளை இதுவாம் சொல்கிறதே.

பாவலர்மணி இராம வேல்முருகன்,                                                       வலங்கைமான்

காலை - விடியற்காலை
விவசாயி நெல் வயலுக்கு விடியற்காலையில் களைப்பறிக்கச் சென்றார்.

காளை  - காளை மாடு

விவசாயிகளின் தோழன் காளை மாடு.

விளை - விளைச்சல்

தைமாதத்தில் நெல் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

விலை - பொருளின் விலை

எந்தப் பொருளையும் நாம் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.

அன்னப் பறவை நடைநடந்து
அன்பை விதைத்துச் செல்வோமா?
வண்ணத் திரையின் காட்சிகளை
வரைந்து நாமும் மகிழ்வோமா?
முந்திச் செல்லும் மேகம்போல்
முன்பே மழையைப் பொழிவோமா?
அந்தி வானக் கதிரோனாய்
அழகை வாரி இறைப்போமா?

- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

பின்வரும் தொடர்களுக்கு ஏற்ற சொல்லைப் பொருத்திப் படித்துப் பழகுக.

(சொல்லிப் , எழிலும், பிள்ளை, பாலும், கொள்ளை)

நல்ல பிள்ளை மெல்லத் தவழும்.

பிள்ளைச் செல்வம் கொள்ளைஇன்பம்.

பள்ளிப்பிள்ளை சொல்லிப் பழகும்.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

அழகும் எழிலும் வலுவும் பொலிவும்.

Post a Comment

0 Comments