11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 . பீடு பெற நில் - இயல்கலைத்தேர்வு / 11th TAMIL - EYAL 3 - ONLINE CERTIFICATE TEST

 


மேல்நிலை முதலாமாண்டு 

பொதுத்தமிழ் 

இயல் 3 - பீடு பெற நில் - 

நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத்தமிழாசிரியை , 

செக்காபட்டி, திண்டுக்கல்

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு,

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வினை எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெறலாம்.

பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு , மதுரை.

1) கூற்று : கோடு' என்பது தமிழ்ச்சொல் ஆகும். விளக்கம் -

கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும்   பொருள்களும் உண்டு.

அ) கூற்று சரி, விளக்கம் தவறு

ஆ) கூற்றும் சரி , விளக்கமும் சரி

இ) கூற்று தவறு , விளக்கம் சரி

ஈ) கூற்றும் தவறு , விளக்கமும் தவறு

விடை : ஆ) கூற்றும் சரி , விளக்கமும் சரி

2) ' கோட்டா' என்ற இனக்குழுவினர் உள்ள இடம்

அ ) நீலகிரி

ஆ) பாலக்காடு

இ) ஒடிஸா

ஈ) குஜராத்

விடை : அ ) நீலகிரி

3) ' மலய ' என்ற சொல்----- க்கு மேற்கே உள்ள மலைகளைக் குறிக்கிறது.

அ ) இடுக்கி

ஆ) மலபார்

 இ) நீலகிரி

 ஈ ) உதகை

விடை : ஆ) மலபார்

4) காவல் மிகுந்த காப்பரண் கொண்ட கட்டமைப்பு

அ) மதில் சுவர்

ஆ) கோட்டை

இ )  எல்லை

ஈ ) வரை

விடை : ஆ) கோட்டை

5) நீலகிரியில் உள்ள தோடர் இனத்தைச் சார்ந்தோர் புனித இடமாகக் கருதுவது

அ) மதிற்சுவர்களை

ஆ) திண்டுகளை

இ ) பன்றிகள் தங்குமிடம்

ஈ) பால் எருமைக் கொட்டில்களை

விடை : ஈ) பால் எருமைக் கொட்டில்களை

6) புறநானூறு ----- பாக்களால் ஆனது.

அ) வெண்பா

ஆ) அகவற்பா

இ) சிந்துப்பா

ஈ) கலிப்பா

விடை : ஆ) அகவற்பா

7) தமிழரின் வாழ்வியல் கருவூலம் -----

அ) குறுந்தொகை

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) பட்டினப்பாலை

விடை : இ) புறநானூறு

8) புறம் என்றும் புறப்பாட்டு என்றும் வழங்கப்படும் நூல் ------

அ) புறநானூறு

ஆ) புறப்பொருள் வெண்பா மாலை

இ) கலித்தொகை

ஈ) நற்றிணை

விடை : அ) புறநானூறு

9) 'துஞ்சலும் இலர் - இத்தொடரில் துஞ்சல் என்பதன் பொருள் -----

அ) சுறுசுறுப்பு

ஆ) இசைவு

இ) துன்பம்

ஈ):சோம்பல்

விடை : O ஈ):சோம்பல்

10) வெட்சி முதல் பாடாண் வரையிலான திணைகளுக்குப் பொதுவான செய்தியைக் கூறுவது

அ) பொதுவியல்

ஆ) கைக்கிளை

இ) பெருந்திணை

ஈ) காஞ்சித்திணை

விடை : அ) பொதுவியல்

11) ' வாடிவாசல்' என்ற நூலின்
ஆசிரியர் ----

அ) வள்ளியப்பா

ஆ) சி.சு.செல்லப்பா

இ )  வல்லிக்கண்ணன்

 ஈ) கி.இராஜநாராயணன்

விடை : ஆ) சி.சு.செல்லப்பா

12) சி.சு.செல்லப்பாவின் ------ புதினம் 2001 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

அ) வாடிவாசல்

ஆ) சுதந்திரதாகம்

இ) ஜீவனாம்சம்

 ஈ) விதி

விடை : ஆ) சுதந்திரதாகம்

13) தமிழரின் வீரவிளையாட்டுகளுள் ஒன்று --

அ ) சல்லிக்கட்டு

ஆ) பூப்பந்து

இ) வலைப்பந்து

 ஈ) கூடைப்பந்து

விடை : O அ ) சல்லிக்கட்டு

14 ) பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை -----

அ) 38

ஆ) 25

இ) 42

ஈ) 70

விடை : ஈ) 70

15) திருக்குறள் ----- நூல்களுள்
ஒன்று.

அ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) எட்டுத்தொகை

இ) பத்துப்பாட்டு

ஈ) பதினெண்மேற்கணக்கு

விடை : அ) பதினெண்கீழ்க்கணக்கு

16) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கெடும் -
இக்குறட்பாவில் உள்ள உவம உருபு

 அ) வாழ்க்கை

ஆ) போல

இ) இல்

ஈ) கெடும்

விடை : ஆ) போல

17) திருக்குறள் -----வெண்பாவால் ஆனது.

அ ) குறள்

ஆ) இன்னிசை

இ) பஃறொடை

ஈ) சிந்தியல்

விடை : அ ) குறள்

18) பெருந்தகையாளனிடம்  உள்ள செல்வத்திற்குரிய  உவமை

அ) புகழ்

ஆ) அறிவு

இ) மருந்துமரம்

ஈ ) மலை

விடை : இ) மருந்துமரம்

19 ) ' ஒப்புரவு ' என்பதன் பொருள்

அ) அடக்கமுடைமை

ஆ) பண்புடைமை

இ) அன்புடமை

ஈ) ஊருக்கு உதவுவது

விடை : ஈ) ஊருக்கு உதவுவது

20) சுடச்சுட - இலக்கணக் குறிப்புத் தருக.

அ ) வினைத்தொகை

ஆ) இரட்டைக்கிளவி

இ) அடுக்குத்தொடர்

ஈ) பண்புத்தொகை

விடை : இ) அடுக்குத்தொடர்Post a Comment

0 Comments