11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - மாமழை போற்றுதும் - இயங்கலைத் தேர்வு / 11th TAMIL - EYAL 2 - ONLINE TEST

 

-

மேல்நிலை முதலாம் ஆண்டு -

பொதுத்தமிழ் - இயல் 2 -

 ' மாமழை போற்றுதும் ' 

நிகழ்நிலைத்தேர்வு - 2

வினா உருவாக்கம் -

திருமதி.இரா.மனோன்மணி ,

முதுகலைத் தமிழாசிரியை

செக்காபட்டி , திண்டுக்கல்.

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வினை எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெறலாம்.

பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு , மதுரை.

****************    ***********   ************

1) உலகச் சிட்டுக்குருவிகள் நாள் -

அ) மார்ச் 20

ஆ) பிப்ரவரி 21

இ) மார்ச் 3

ஈ) டிசம்பர் 6

விடை : அ) மார்ச் 20

2) சிற்றிலக்கியம் ----- வகைப்படும்.

அ) 96

ஆ) 26

இ) 33

ஈ) 76

விடை : அ ) 96

3) செங்கயல் - இலக்கணக் குறிப்பு

அ) வினைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) வினையாலணையும் பெயர்

ஈ ) வினையெச்சம்

விடை : பண்புத்தொகை

4 ) எங்கோ போயின ஏதிலியாய்க் ------

அ) கடல்கள்

ஆ) குருவிகள்

இ) மனிதர்கள்

ஈ) விலங்குகள்

விடை : ஆ ) குருவிகள்

5) பிரமிள் ' என்ற பெயருடைய
சி. ராமலிங்கம் ------  நாட்டில் பிறந்தார்.

அ) இந்தியா

ஆ) சீனா

இ) இந்தோனேஷியா

ஈ) இலங்கை

விடை : ஈ ) இலங்கை

6) பிரிந்த - இலக்கணக் குறிப்பு ------

அ) பெயரெச்சம்

ஆ) வினையெச்சம்

இ) வினைத்தொகை

ஈ) பண்புத்தொகை

விடை : அ ) பெயரெச்சம்

7) " முத்து " என்ற பொருள் தரும்
சொல் -------

அ ) தரளம்

ஆ) கொண்டல்

இ) இந்தளம்

ஈ) அலை

விடை : அ ) தரளம்

8) பெரியவன் கவிராயர் எழுதிய 
பள்ளுவின் பாட்டுடைத் தலைவர்

அ) குற்றாலநாதர்

ஆ) திருமலை முருகன்

இ) அழகர்

ஈ) சிவன்

விடை : ஆ ) திருமலை முருகன்

9) தொல்காப்பியம் குறிப்பிடும் 
---- எனும் இலக்கிய வகையைச் சார்ந்த பள்ளு

அ) கலம்பகம்

ஆ) இலம்பகம்

இ) அந்தாதி

ஈ) புலன்

விடை : ஈ ) புலன்

10) தென்கரை நாட்டின் குளங்களின் அலைகள் ------- ஏந்தி வரும்.

அ) ஓடங்களை

ஆ) மீன்களை

இ) முத்துக்களை

 ஈ) இரத்தினங்களை

விடை : இ) முத்துக்களை

11) மின்னலையொத்த பெண்கள்
என்றால் மழை பெய்யும்.

அ) நில்

ஆ) செல்

இ) பெய்

ஈ) பொய்

விடை : இ ) பெய்

12) குற்றாலன் , பாற்கடுக்கன்,
காடைக்கடுக்கன் , பனைமுகத்தன் போன்றவை திருமலை முருகன் பள்ளு கூறும் வகைகள்.

அ) மாடு வகைகள்

ஆ) புல் வகைகள்

இ) பறவை

ஈ) மரவகைகள்

விடை : அ ) மாடு வகைகள்

13) பெரியவன் கவிராயரின் காலம் கி.பி. - நூற்றாண்டு -----

அ) 12

ஆ) 14

இ)16

ஈ) 18

விடை : ஈ ) 18

14) ' மஞ்ஞை' என்பதன் பொருள் ------

அ ) மயில்

ஆ) குயில்

இ) ஆடு

ஈ ) சிங்கம்

விடை : அ ) மயில்

15)' பெருங்கலம்' புணர்ச்சி விதி 

அ ) ஈறுபோதல் , தன்னொற்று இரட்டல்

ஆ) ஈறுபோதல் , இனமிகல்

இ) ஈறுபோதல் , ஆதிநீடல்

ஈ) ஈறுபோதல் , இணையவும்

விடை : ஆ ) ஈறுபோதல் , இனமிகல்

16 ) " யானை டாக்டர் " என்ற
குறும்புதினம் இடம்பெற்றுள்ள
சிறுகதைத் தொகுப்பு -------

அ ) அறம்

ஆ) மறம்

இ) மத்தகம்

ஈ) ஊமைச்செந்நாய்

விடை : அ ) அறம்
.
17) யானையை , காட்டின் ------- என்பர்.

அ) அரசன்

ஆ) தலைவன்

இ) மூலவர்

ஈ) இறைவன்

விடை : இ ) மூலவர்

18) யானைகள் ஏறத்தாழ -----ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

அ) 70

ஆ) 80

இ )  90

ஈ) 100

விடை : அ ) 70

19 ) பதினெட்டு மெய்களுள் ---- மெய்கள் மட்டும் உடம்படுமெய்கள் ஆகும்.

அ ) ழ், ள

ஆ)ய் ,வ்

இ ) ஈ , இ

ஈ) ர் ,வ்

விடை : ஆ ) ய் , வ்

20) பண்புப் பெயர் புணர்ச்சியில்
இடம் பெறும் மொத்த விதிகளின்
எண்ணிக்கை

அ) 5

ஆ) 10

இ )  7

ஈ) 8

விடை : ஈ ) 8

****************    ************   ************


Post a Comment

0 Comments