பத்தாம் வகுப்பு - தமிழ்
அலகுத் தேர்வு ( இயல்கள் 4 , 5 , 6 , 7 )
மாதிரி வினாத்தாள் - நவம்பர் - 2021
காலம் : 1:30 மணி மதிப்பெண்கள் : 50
வினா உருவாக்கம்
திரு.மணிமீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை
பகுதி - 1 மதிப்பெண்கள் - 6
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) ' உனதருளே பார்ப்பன் அடியனே ' - யாரிடம் யார் கூறியது ?
அ ) குலசேகர ஆழ்வாரிடம் இறைவன்
ஆ ) இறைவனிடம் குலசேகர ஆழ்வார்
இ ) மருத்துவரிடம் நோயாளி
ஈ ) நோயாளியிடம் மருத்துவர்
2 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
அ ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ ) அங்கு வறுமை இல்லாததால்
3 ) எழுவாய் , பயனிலைகளை வரிசைப்படி நிறுத்திப் பொருள் கொள்ளும் முறை எது ?
அ ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
ஆ ) முறைநிரல்நிரைப் பொருள்கோள்
இ ) எதிர்நிரல் நிரைப் பொருள்கோள்
ஈ ) கொண்டு கூட்டுப்பொருள்கோள்
4 ) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.கருதியது ------
அ ) திருக்குறள்
ஆ ) புறநானூறு
இ ) கம்பராமாயணம்
ஈ ) சிலப்பதிகாரம்
பாடலைப்படித்து படித்து விடை தருக.
" வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் "
5 ) இவ்வடிகளில் வெய்யோன் என்பது --------ஐக் குறிக்கிறது.
அ ) இராமன் ஆ ) சூரியன்
இ ) இலக்குவன்
ஈ ) இராமனும் சூரியனும்
6 ) இவ்வடிகளில்' இடையாளொடும் இளையானொடும் ' என்பது யாரைக் குறிக்கிறது ?
அ ) இராமனும் சீதையும்
ஆ ) இலக்குவனும் சீதையும்
இ ) சீதையும் இலக்குவனும்
ஈ ) சீதையும் இராமனும்
பகுதி - 2
மதிப்பெண்கள் - 12
பிரிவு - 1
குறுகிய விடை தருக. ( மூன்று மட்டும் )
( வினா எண் 10 , கட்டாய வினா )
7 ) செய்குத்தம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
8 ) விடைக்கேற்ற வினா அமைக்க.
அ ) பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.
ஆ ) கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
9 ) வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி.என்பதற்குச் சான்று தருக.
10 ) ' செயற்கை ' எனத்தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு - 2
விடை தருக ( மூன்று மட்டும் )
11 ) கூத்துக் கலைஞர் பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். ( கலவைத் தொடராக மாற்றுக )
12 ) கலைச்சொற்கள் தருக.
அ ) Myth ஆ ) Intellectual
13 ) கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
அ ) இயற்கை - செயற்கை
ஆ ) விதி - வீதி
14 ) கீழ்க்காணும் ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
அ ) கோயம்புத்தூர்
ஆ ) திருநெல்வேலி
பகுதி - 3
( மதிப்பெண்கள் : 9 )
சுருக்கமான விடை தருக. ( மூன்று மட்டும் )
( வினா எண் : 17 கட்டாய வினா )
15 ) தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் ' - இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
16 ) " மாளாத காதல் நோயாளன் போல் " என்னும் தொடரில் உவமை சுட்டும் பொருளை எழுதுக.
17 ) ' அருளைப் பெருக்கி ' எனத் துவங்கும் நீதிவெண்பா பாடலை அடிபிறழாமல் எழுதுக.
18 ) பெரும்பொழுதுகள் , சிறுபொழுதுகள் - வகைப்படுத்துக.
பகுதி - 4
( மதிப்பெண்கள் : 15 )
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
19 ) நீவிர் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக.
20 ) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.
21 ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ' உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
22 ) நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக.
பகுதி - 5
( மதிப்பெண்கள் : 8 )
23 ) ' பெண் ஆளுமை மிக்கவள் ' என்பதை மங்கையராயப் பிறப்பதற்கே என்னும் விரிவானப் பகுதியைக் கொண்டு நிறுவுக.
( அல்லது )
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
************** ************** *************
2 Comments
Waste
ReplyDeleteWorth
ReplyDelete