பொதுத்தமிழ் -
மேல்நிலை முதலாம் ஆண்டு
இயங்கலைத் தேர்வு-இயல் 1-
என்னுயிர் என்பேன்.
வினா உருவாக்கம் -
அ.அன்பு தவமணி ,
முதுகலைத் தமிழாசிரியர் ,
வெள்ளலூர் , மதுரை.
தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வினை எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெறலாம்.
பசுமைக்கவிஞர் மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர் இளமனூர், மதுரை.(
பைந்தமிழ் வலையொளி - Green Tamil -
You Tube - 97861 41410 )
1) ' பேச்சு மொழியும் கவிதை மொழியும் ' என்னும் உரைநடையை எழுதிய இந்திரன் அவர்களின் இயற்பெயர் -----
அ ) சு.வில்வரத்தினம்
ஆ ) ராசேந்திரன்
இ ) அ.முத்துலிங்கம்
ஈ ) வ.ஐ.ச.ஜெயபாலன்
விடை : ஆ ) ராசேந்திரன்
2) ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர் ?
அ ) பிரான்சு
ஆ ) இங்கிலாந்து
இ ) அமெரிக்கா
ஈ ) பிரிட்டன்
விடை : அ ) பிரான்சு
3) சிலி நாட்டில் பிறந்த பாப்லோ
நெருடா எந்த ஆண்டு
இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்?
அ ) 1969
ஆ ) 1970
இ ) 1971
ஈ ) 1972
விடை : இ ) 1971
4) மனித இனத்தின் ஆதி அடையாளம் எது?
அ ) தொல்காப்பியம்
ஆ ) இதிகாசம்
இ ) புராணம்
ஈ ) மொழி
விடை : ஈ ) மொழி
5) சு.வில்வரத்தினம் இலங்கை
யாழ்ப்பாணத்தில் எந்த ஊரில்
பிறந்தார்?
அ ) புங்குடுதீவு
ஆ ) மாலத்தீவு
இ ) லட்சத்தீவு
ஈ ) கொழும்புத்தீவு
விடை : அ ) புங்குடுதீவு
6) தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை'வேரில்லாத மரம் ; கூடு இல்லாத பறவை' என்று கூறியவர் -----
அ ) பாப்லோ நெருடா
ஆ ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ ) ரசூல் கம்சதேவ்
ஈ ) வால்ட் விட்மன்
விடை : இ ) ரசூல் கம்சதேவ்
7) தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் -------
அ ) நன்னூல்
ஆ ) நேமிநாதம்
இ ) முத்துவீரியம்
ஈ ) தொல்காப்பியம்
விடை : ஈ ) தொல்காப்பியம்
8) பாயிரம் இல்லது ---- அன்றே
அ ) சொல்
ஆ ) பனுவல்
இ ) மொழி
ஈ ) பொருள்
விடை : ஆ ) பனுவல்
9) நன்னூல் எத்தனை அதிகாரங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது?
அ ) 2
ஆ ) 3
இ ) 4
ஈ ) 5
விடை : அ ) 2
10) திருக்குறளையும், திருவாசகத்தையும்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
அ ) ஜி.யு.போப்
ஆ ) வீரமாமுனிவர்
இ ) பாரதியார்
ஈ ) பாரதிதாசன்
விடை : அ ) ஜி.யு.போப்
11) ஆறாம் திணை என்பது ------
அ ) மலையும் மலை சார்ந்த நிலமும்
ஆ ) காடும் காடு சார்ந்த நிலமும்
இ ) வயலும் வயல் சார்ந்த நிலமும்
ஈ ) பனியும் பனி சார்ந்த நிலமும்
விடை : ஈ ) பனியும் பனி சார்ந்த நிலமும்
12) கீழ்க்கண்டவற்றுள் தமிழ்ச்சொல் -----
அ ) டமாரம்
ஆ ) ராக்கி
இ ) கோதை
ஈ ) டப்பா
விடை : இ ) கோதை
13) மொழி முதல் எழுத்துக்கள்
எத்தனை?
அ ) 22
ஆ ) 24
இ ) 26
ஈ ) 28
விடை : அ ) 22
14) சொல்லின் முதலிலும் இறுதியிலும் வராத சார்பெழுத்து எது?
அ ) உயிர்மெய்
ஆ ) குற்றியலுகரம்
இ ) குற்றியலிகரம்
ஈ ) ஆய்தம்
விடை : ஈ ) ஆய்தம்
15) பவணந்தி முனிவரின் காலம்
நூற்றாண்டு
அ ) 13
ஆ ) 14
இ ) 15
ஈ) 16
விடை : அ ) 13
16) மாநகர் இலக்கணக் குறிப்பு -----
அ ) தொழிற்பெயர்
ஆ ) வினையாலணையும் பெயர்
இ ) முற்றும்மை
ஈ ) உரிச்சொற்றொடர்
விடை : ஈ ) உரிச்சொற்றொடர்
17 ) யார் கேட்டுக்கொண்டதால்
பவணந்தி முனிவர் நன்னூலை
இயற்றினார்?
அ ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ ) மாறன் வழுதி
இ ) உக்கிரப்பெருவழுதி
ஈ) சீயகங்கன்
விடை : ஈ ) சீயகங்கன்
18) பொதுச் சிறப்பு = பொது + சிறப்பு எவ்வாறு புணரும்?
அ ) இயல்பினும் விதியினும் நின்ற
உயிர்முன் கசதப மிகும்
ஆ ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது
இயல்பே
இ ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு
ஓடும்
ஈ ) ஈறுபோதல்
விடை : அ ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
19 ) உலகில் வாழும் புலம்பெயர்
மக்களில் எந்த நாட்டைச்
சேர்ந்தவர்கள் அதிகம்?
அ ) ஆஸ்திரேலியா
ஆ ) இங்கிலாந்து
இ ) மாலத்தீவு
ஈ ) இலங்கை
விடை : ஈ ) இலங்கை
20) பவணந்தி முனிவர் எந்தசமயத்தைச் சார்ந்தவர் ?
அ ) சைவம்
ஆ ) சமணம்
இ ) பௌத்தம்
ஈ ) வைணவம்
விடை : ஆ ) சமணம்
************** ********** ************
2 Comments
Hii
ReplyDeleteSinju
ReplyDelete